Annamalai VS Stalin: இதற்கெல்லாம் ஆளுநர் காரணமா? - முதலமைச்சர் புகாருக்கு பட்டியல் போட்ட அண்ணாமலை!
தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் ஆளுநர் தான் பொறுப்பா என முதலமைச்சரை கேள்வி எழுப்பியுள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

ஆளுநரை நீக்கக்கோரி குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியது தொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், “ஊழல் திமுக அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலின், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாட்டை ஆளுநர் சீர்குலைப்பதாக புகார்.
1. ஜி.யு. போப் மொழி பெயர்த்த திருக்குறளின் விளக்கத்தை கவர்னர் ஏற்க மறுத்தது எப்படி அரசாங்கத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதாக அமையும்?.
2. தமிழ் இலக்கியத்தின் சாராம்சத்தை மிஷனரிகள் அழித்தனர் என்று கவர்னர் சொன்ன கருத்து அரசாங்கத்தின் செயல்பாட்டை எவ்வாறு சீர்குலைப்பதாக அமையும்?.
3. வேங்கைவயலில் தாமதமான நீதிக்கு ஆளுநர் பொறுப்பா?
4. தமிழக முதல்வரின் மகன் & மருமகன் ஊழல் வழியில் ஒரு வருடத்தில் 30,000 கோடி சம்பாதித்ததற்கு ஆளுநர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
5. பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரியை உளவுத்துறையின் தலைவராக ஆக்குவதற்கு ஆளுநர் வாய்மூடி பார்வையாளராக இருக்க வேண்டுமா?
6. ஆளுநர், அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் தடுத்துள்ளாரா? ஊழலில் திளைக்கும் திமுக அரசு 2 ஆண்டுகள் ஆகியும் 90% வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்?
7. ஆளுநர் தனது மனசாட்சியை புதைத்து, தயாரிக்கப்பட்ட பொய்யை சட்டசபையில் படிக்க வேண்டுமா?
8. இன்று மாநிலத்தில் நிலவும் சட்டமீறலுக்கு ஆளுநர் பொறுப்பா?
9. இன்று மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத மணல் மற்றும் ஜல்லிக் கடத்தலுக்கு ஆளுநர் பொறுப்பா?
10. மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய அரசு அதிகாரிகளின் மரணத்திற்கு ஆளுநர் பொறுப்பா?
11. தொடர்ந்து 2 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத எஸ்சிஎஸ்பி நிதிக்கு ஆளுநர் பொறுப்பா?
12. மாநிலத்தில் சாரயம் குடித்து, உயிரிழப்பவர்களுக்கு ஆளுநர் பொறுப்பா?
13. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் வீழ்ச்சியடைவதற்கு ஆளுநர் பொறுப்பா?
14. மாநிலத்தில் லாக்அப் மரணங்களுக்கு ஆளுநர் பொறுப்பா மற்றும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சட்டசபையில் பொய் சொன்னாரா?
15. தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும் தலைவிரித்தாடும் ஊழலுக்கு ஆளுநர் பொறுப்பா?
16. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஆளுநர் பொறுப்பா? ” , என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு பற்றி மக்கள் ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த புகாரை கூறி இருப்பது எப்படி என்று புரியவில்லை. இதனால் குறை கூறுவதை விட்டு முதலமைச்சர் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.