மேலும் அறிய

CM Vijay: தூயசக்திக்கு அர்த்தம் தெரியுமா முதல்வரே... விஜயை வெளுத்து வாங்கிய ஹெச்.ராஜா!

தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதம் நிறைவுப் பெறுகிறது. இந்த ஒரு மாத காலத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்னைகளை தமிழ்நாடு சந்தித்தது. அதனை தடுக்க விஜய் தலைமையிலான அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய ஒரு மாத கால ஆட்சியில் தூய சக்தி என நிரூபிக்கவே இல்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விளாசியுள்ளார். 

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மே 10ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்றது. முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வரும் நிலையில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதம் நிறைவுப் பெறுகிறது. இந்த ஒரு மாத காலத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்னைகளை தமிழ்நாடு சந்தித்தது. அதனை தடுக்க விஜய் தலைமையிலான அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்படியான நிலையில் தவெக  ஒரு தூயசக்தி என மக்களிடம் நிரூபிக்கவே இல்லை என ஹெச்.ராஜா சாடியுள்ளார். அதன் பின்னணி என்ன என்பதைக் காணலாம். 

ஒரு மாத தவெக ஆட்சியின் நிலைமை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தூயசக்தி எனும் தூய்மையான ஆட்சிக்கு அர்த்தம் தெரியாதவர். நியாயம், நீதி,உண்மை, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை ஒட்டுமொத்தமாக சேர்ந்தாலே அது தூயசக்தி எனப்படும்.  ஒருமாத கால ஆட்சியில் அது எவ்வளவு தூரம் இருந்தது என எடை போடுவோம். 

நியாயம் என்ற வகையில் தவெக அரசின் செயல்பாடுகளையும் அமைச்சர்களின் திறத்தையும் வெட்டவெளியில் போட்டு கேள்விகளால் துளைத்து இந்த அரசை விமர்சித்த யூடியூபர் மாரிதாஸ் எந்த ஒரு விசாரணையும் இன்றி நேரடியாக கைது செய்யப்படுகிறார். இது அநியாயமில்லையா?

நீதி வகையில் திருப்பரங்குன்ற தீபம் ஏற்றும் விவகாரத்தில் ‘நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடைமுறை இருந்ததோ அதையே தான் பின்பற்றுவோம் என உங்களது அமைச்சர்கள் சொல்கிறார்கள். இதுதான் மத நல்லிணக்கதோடு இருப்பதற்கான லட்சணமா? இதற்குப் பெயர் அநீதி!

Also Read: Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!

உண்மை என்ற பிரிவில் மின்சாரத்துறையிலிருந்து முதலில் ஒன்று என தொடங்கி தற்போது 18 ஹாட் டிஸ்க்குகளை காணவில்லை என செய்தி வந்திருக்கிறது.  இதுதான் உங்களது உண்மைத்தன்மையா?

நேர்மை என்பது உங்களிடத்தில் துளியும் இல்லை. அனைத்து மக்களுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என சொல்லி 500 யூனிட் பயன்படுத்துவர்களுக்கு மட்டும் இலவசம் என சொல்லி இக்கு வைப்பது, பயிர்க்கடன் தள்ளுபடி என கூறி விவசாயிகளை ஏமாற்றியது என்று இதற்குப் பெயர் நேர்மையல்ல, அதற்கு நேர்மாறு!

வெளிப்படைத்தன்மை தவெக ஆட்சியில் எங்கும் எதிலும் இல்லை. உங்களுக்கு பெரும்பான்மை இல்லையென்றபோது பாஜகவின் ஜனநாயக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரிடம்  நீங்கள் எப்படியெல்லாம் மறைமுக பேரம் பேசி உங்கள் பக்கம் இழுத்துள்ளீர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். உங்கள் பம்மாத்து அரசியலை வெத்துவேட்டு அரசியல் என அழைக்கலாம். 

தன்னை தூயசக்தி என அழைத்துக் கொள்ளும் வாய்ச்சொல் வீரர்களும் தீயசக்தி திமுகவின் நீட்சியே..நீட்சியே..நீட்சியே என ஹெச்.ராஜா தனது பதிவில் காட்டமாக விமர்சித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை! ஜிப்மரில் தொடங்கும் ஒரு மாத கால பிரம்மாண்ட பதிவு முகாம்!
ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை! ஜிப்மரில் தொடங்கும் ஒரு மாத கால பிரம்மாண்ட பதிவு முகாம்!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
Embed widget