மேலும் அறிய

CM Vijay: அன்று அவமரியாதை.. இன்று தமிழ்நாடுக்கே பெருமை.. நேரு ஸ்டேடியத்துக்கும் விஜய்க்கும் உள்ள தொடர்பு!

Vijay Oath Ceremony: தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்கும் நிலையில் அந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. அந்த இடத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்கும் நிலையில் 13 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவம் ஒன்றைப் பற்றிப் பார்க்கலாம். 

புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய்

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் ஒன்று பதவியேற்கவுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற அக்கட்சி இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க விஜய் ஆட்சியமைக்கிறார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்வை தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இன்றைய விழா நடைபெறும் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 2013ம் ஆண்டு ஒரு கசப்பான சம்பவம் நடைபெற்றது. 

Vijay CM Oath Ceremony LIVE: விஜய் பதவியேற்பு விழா லைவ்

கடைசி வரிசையில் அமர வைக்கப்பட விஜய்

கடந்த 2013ம் ஆண்டு  இந்திய சினிமா நூற்றாண்டு விழா இதே சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதற்கு அப்போதைய முதலமைச்சரான மறைந்த அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். அந்த நிகழ்சியில் நடிகராக இருந்த விஜய்க்கு கடைசி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததைக் கண்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களும் அதிர்ச்சியடைந்தனர். இத்தனைக்கும் அப்போது விஜய் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தார். விழாவில் எதையும் பொருட்படுத்தாமல் விஜய் அமர்ந்திருந்தார். இந்த  நிலையில் அதனைக் கண்ட நடிகர் விக்ரம்  அவருக்கு அருகில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார். 

இந்த சம்பவம் இன்றளவும் விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. அதற்கு காரணம் அந்த சமயத்தில் விஜய் நடித்த தலைவா படம் வெளியானது. அதில் டைட்டிலுக்கு கீழே “Time To Lead" என்ற வாசகம் இடம்பெற்றது. இது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை கடுமையான கோபத்துக்கு ஆளாக்கியதாக சொல்லப்படுகிறது. அந்த வாக்கியத்தை நீக்காவிட்டால் பிரச்னைகள் வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தலைவா ரிலீஸாவதில் சிக்கல் நிகழ்ந்தது.

தமிழ்நாட்டில் வெளியாகாமல் பிற மாநிலங்களில் சொன்ன தேதியில் படம் வெளியாக 10 நாட்கள் கழித்தே தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது. இந்த பட பிரச்னைக்காக கோடநாட்டுக்கு சென்றிருந்த ஜெயலலிதாவை விஜய் நேரில் சந்திக்க சென்றார். இதனைத் தொடர்ந்து விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு  ஜெயலலிதாவின் உதவியை நாடியிருந்தார். அதன்பின் அந்த வாசகம் நீக்கப்பட்டு படம் வெளியானது. அன்று முதலே விஜய்க்கு ஒவ்வொரு படம் வெளியாவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட தொடங்கியது. 

இதே நேரு உள்விளையாட்டரங்கில் விஜயின் பட நிகழ்ச்சிகள் நடந்துள்ள நிலையில் 2013ல் நடந்த சம்பவம் ஆறாத வடுவாக இன்றளவும் உள்ளது.  

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி எப்போ தெரியுமா?
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி எப்போ தெரியுமா?
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
"இனி தைரியமா புகார் அளிக்கலாம்” - தமிழகத்திலேயே முதல்முறையாக பெண்களுக்காக உதயமாகிய பிங்க் காவல் மையம் - எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?
சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?
ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்
ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்
சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!
சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!
"இனி தைரியமா புகார் அளிக்கலாம்” - தமிழகத்திலேயே முதல்முறையாக பெண்களுக்காக உதயமாகிய பிங்க் காவல் மையம் - எங்கு தெரியுமா?
இனி மாடுகளுக்கும் ஆதார் எண்; காப்பீடு முதல் தடுப்பூசி வரை.. மயிலாடுதுறையில் டிஜிட்டல் புரட்சி!
இனி மாடுகளுக்கும் ஆதார் எண்; காப்பீடு முதல் தடுப்பூசி வரை.. மயிலாடுதுறையில் டிஜிட்டல் புரட்சி!
Embed widget