தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த இடைபட்ட காலத்தில் இந்த ஒதுக்கீட்டின் மூலம் பலன் பெற்றவர்களின் நிலைமை என்னவாகும் என்று சந்தேகம் இருந்தது. தற்போது அதுதொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர் வன்னியர் இட ஒதுக்கீட்டில் கல்வி அல்லது வேலை வாய்ப்பில் இடம் வழங்கிய உத்தரவுகள் குறித்து சில வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியபோது, சட்டமே ரத்தாகிவிட்டதால் அதன்மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளும் ரத்தாகிவிடும் என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
அப்போது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்த மாணவர்கள் தரப்பில், இந்த தீர்ப்பால் தங்களது கல்வி பாதிக்கப்படும் என்பதால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்லும் வகையில், தீர்ப்பை சில வாரங்கள் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
மேலும், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுத்தது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இதனிடையே, இந்த ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பலனடைந்தவர்களின் நிலைமை என்னவாகும் என்பது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வில்சன் கூறுகையில், “அனைத்துமே வழக்குக்கு உட்பட்டது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றமும் வழக்குக்கு உட்பட்டது என்று கூறியுள்ளது. அதனால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும்போது, இந்த ஒதுக்கீட்டின் மூலம் பெற்ற அனைத்தும் ரத்து ஆகிவிடும்” என்று கூறினார்.
முன்னதாக,
தமிழ்நாடு அரசு மற்றும் பாமக, வன்னியர் அறக்கட்டளை உள்ளிட்டோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பீ.ஆர்.கவாய் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. உள்ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாமான காரணங்களை அரசு கொடுக்க வேண்டும் என்றும், சாதி அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடுகளை முடிவு செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக ஆட்சியில் வன்னியருக்கு 10.5% வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் மாதம் அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்