மேலும் அறிய

பீர் விற்பனையில் சாதனை! மிரள வைக்கும் தமிழக டாஸ்மாக் கலெக்ஷன்! முழு விவரம் உள்ளே!

TASMAC liquor sales in Tamil Nadu: "கோடை காலம் மற்றும் தேர்தல் நடைபெற்றதால், தமிழ்நாட்டில் வரலாற்று காணாத வகையில் பீர் விற்பனை நடைபெற்றுள்ளது."

Tasmac Sales: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பீர் விற்பனை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நிலவிய கடும் கோடை வெயில் மற்றும் விறுவிறுப்பான சட்டசபை தேர்தல் களம் ஆகிய இரண்டு காரணங்களால், டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 45.60 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதத்தில் 38 லட்சம் பெட்டிகள் விற்பனையானதே அதிகபட்ச அளவாகக் கருதப்பட்டது. தற்போது அந்த முந்தைய சாதனையை ஏப்ரல் மாத விற்பனை வெகுவாகக் கடந்து சென்றுள்ளது.

கோடை காலம் மற்றும் தேர்தல்

இந்த அதீத விற்பனை உயர்வு குறித்து விரிவாகப் பார்க்கையில், ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழகத்தில் சூரியனின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது பொதுமக்களை வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மதுப்பிரியர்கள் அதிக அளவில் பீர் வகைகளைத் தேர்வு செய்ததே இந்த விற்பனைப் பெருக்கத்திற்கு முதன்மையான காரணமாகும்.

மற்றொரு புறம், ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரங்கள் உச்சத்தில் இருந்தன. தேர்தல் களத்தில் பணியாற்றிய கட்சித் தொண்டர்களுக்கு அரசியல் கட்சியினர் தாராளமாக பீர் மற்றும் மது வகைகளை வழங்கியதும் இந்த விற்பனை அதிகரிப்புக்கு ஒரு வலுவான காரணியாக அமைந்திருந்தது. இதனால் டாஸ்மாக் கடைகளில் எப்போதுமில்லாத கூட்டம் அலைமோதியது.

Vijay CM Oath Ceremony LIVE: விஜய் பதவியேற்பு விழா லைவ்

புள்ளிவிவர ரீதியிலான விற்பனை 

விற்பனைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரலில் 37.50 லட்சம் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை, இந்த ஆண்டு 45.60 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல், மது வகைகளின் (Hard Liquor) விற்பனையும் கடந்த ஏப்ரலில் 55 லட்சம் பெட்டிகளாக அதிகரித்துள்ளது. 

இது முந்தைய மார்ச் மாதத்திலோ அல்லது கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்திலோ இருந்த விற்பனையை விட மிக அதிகமாகும். ஒரு பீர் பெட்டியில் 12 பாட்டில்களும், ஒரு மது வகை பெட்டியில் 48 குவார்ட்டர் பாட்டில்களும் இருக்கும் என்ற நிலையில், தினசரி சராசரியாக 1.50 லட்சம் பெட்டி மதுவும், ஒரு லட்சம் பெட்டி பீரும் விற்பனையாகும் சராசரி அளவை ஏப்ரல் மாதத்தின் தேவைகள் முறியடித்துள்ளன.

அதிகாரிகளின் விளக்கம் என்ன ?

தேர்தல் விதிமுறைகளின்படி வாக்குப் பதிவிற்கு முன்னதாக மூன்று நாட்கள் மதுக்கடைகள் கட்டாயமாக மூடப்பட்டிருந்தன. இவ்வளவு பெரிய இடைவெளி இருந்தபோதிலும், ஏப்ரல் மாதத்தின் ஒட்டுமொத்த விற்பனை அளவு குறையாமல் புதிய சாதனையைப் படைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும், டாஸ்மார்க் கடையில் மதுபானங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோடை காலங்களில் இயல்பாகவே பீர் விற்பனை அதிகரிக்கும் என்றாலும், இந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரமும் சேர்ந்து கொண்டதால் விற்பனை அசுர வேகத்தில் உயர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கடும் வெயில் காரணமாகத் தாகத்தைத் தணிக்க மதுப்பிரியர்கள் பீரை அதிகம் நாடியதே இத்தகைய முன்னெப்போதும் இல்லாத விற்பனை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget