அரையாண்டு தேர்வு முடிந்தது

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு குஷிதான், சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார்கள். அந்த வகையில் தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜனவரி 5ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த நிலையில் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்னும் 3 மாதத்தில் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறவுள்ளது. இதனையொட்டி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்களுக்கு தொடர்ந்து ஓய்வு கிடைக்காமல் மன அழுத்தம் ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. 

Continues below advertisement

12 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை

இந்த சூழ்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தவுள்ளதாக வெளியான தகவலையடுத்து பள்ள கல்வித்துறை முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  பள்ளிக் கல்வி -அரையாண்டு தேர்வுக்கு பிறகு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 24-12-2025 (புதன் கிழமை) முதல் 4-01-2026 (ஞாயிற்று கிழமை) வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5-01-2026 திங்கட் கிழமை அன்று முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி தலைமையாசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Continues below advertisement

சிறப்பு வகுப்பு நடத்த தடை

பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய που முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது.மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி. குளம் மற்றும் குட்டைபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம்.

மாணவர்களின் வளர்ச்சிக்கு சமர்ச்சீரான உணவு அளிப்பது அவசியம் இசை, நடனம் மற்றும் ஒவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும். தாத்தா பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும் மேலும் பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்குங்கள். அனைத்து பள்ளி தலைமையாசிரிகளும் மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.