முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை விமர்சித்ததாக தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா மீது அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆ.ராசாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்ட நிலையில், அவரும் பதில் அளித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஆ.ராசா பேசியதாக கூறி அடுத்த 48 மணி நேரத்திற்கு அவர் பரப்புரை செய்ய தடை விதித்துள்ள தேர்தல் ஆணையம், பெண்களை பற்றி கண்ணியமான கருத்துக்களை ஆ.ராசா தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது.