Bakrid CM Wishes : இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பக்ரீத் :
பக்ரீத் தினத்தன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சூரியன் முழுமையாக உதித்த பிறகே மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடத்துகிறார்கள். மதியத் தொழுகை நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். தொழுகைக்குப் பிறகு, இஸ்லாமியர்கள் பிரசங்கங்களில் கலந்து கொள்கிறார்கள்.சிறப்பு தொழுகைக்குப் பிறகு வீடு திரும்பும் மக்கள் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு ஆடுகளை குர்பானியாகக் கொடுத்து அதனைப் பகிர்ந்தளித்து உண்கிறார்கள்.
இந்த நாளில் இறைவனின் பெயரால் ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்ட மிருகங்களை பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கினை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வரும் 29ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வரும் 29ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், ”சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்.
ஏழை எளியோரின் பசிதீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்நாளில், ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்: பிறகு நண்பர்கள்: அடுத்துதான் தங்களுக்கு" என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இசுலாமியப் பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
இத்தகைய உயரிய நெறியினைக் கடைப்பிடித்து வரும் இசுலாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி அன்பைப் பரிமாறிக் கொள்ளவும் நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்திக் கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
எடப்பாடி பழனிசாமி
”உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவி; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனிதநேயமும் தழைத்தோங்க வேண்டும். அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துவதோடு எனது உளங்கனிந்த பக்ரீத்திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க