ஜல்லிக்கட்டு காளை களத்தில் விளையாடி வரும் கலெக்சன் பாயிண்டில் காளை முட்டியதில் ஒருவர் படுகாயம்.
தமிழ்நாட்டில் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்த போட்டிகளை நேரில் கண்டு ரசிக்க ஏராளமான மக்கள் கூடுவார்கள். மேலும் பல மாதங்களுக்கு முன் இருந்தே மாடு உரிமையாளர்கள், அதற்கு சிறப்பு பயிற்சி அளிப்பார்கள். அவனியாபுரத்தில் (இன்று) 15 ஆம் தேதியும் பாலமேட்டில் 16 ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ஆம் தேதியும் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. அதிலிருந்து ஏராளமான மாடுபிடி வீரர்களும், காளைகளும் முன்பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் 12,176 காளைகள் மற்றும் 4,514 வீரர்கள் போட்டியில் கலந்துகொள்ள தயாராக உள்ளனர். அவனியாபுரத்தில் 2,400 காளைகளும், பாலமேட்டில் 3,677 காளைகளும், அலங்காநல்லூரில் 6,099 காளைகளும் கலந்துகொள்ள உள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டியில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்றால் அது லைவ் கமண்டரிதான். காளை மற்றும் வீரர்களுக்கு ஏற்றவாறு மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கும். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெரும் மாடுபிடி விரர்களுக்கு வகை வகையான பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். பாத்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், கார், பைக், தங்க காசுகள் என பரிசுகள் குவியும்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு மாடிபிடி வீரர்கள் போட்டிக்கான விதிமுறைகளை பின்பற்றுவதற்கான உறுதிமொழி ஏற்று போட்டியினை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாநகராட்சி ஆணையர் மதுபாலா ஆகியோர் கொடியசைத்து தொடங்க வைத்தனர். போட்டியில் ஆயிரம் காளைகளும் 600 மாடு பிடி வீரர்களும் பங்கேற்கிறார்கள். இதுவரைக்கும் 5 சுற்றில் 429 காளைகள் அவிழ்த்துவிட்டு முடிவடைந்து, 6-வது சுற்று தொடர்ந்து நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விடும்போது காளைகள் விளையாடி செம்பூரணி பகுதியில் உள்ள கலெக்சன் பாயிண்ட், பகுதிகளுக்கு வரக்கூடிய காளைகளை காளையின் உரிமையாளர்கள், கயிறுகளை வீசி பிடித்து செல்கின்றனர். காளைகளுக்கு மூக்கணாங்கயிறு மாட்டி அவர்களது ஊருக்கு கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வேடிக்கை பார்க்க வந்த ஒருவரை காலை முட்டியதில் படுகாயம் அடைந்தார். இதுவரைக்கும் சார்பு ஆய்வாளர் உட்பட 34 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.