மேலும் அறிய

கல்வி சார்ந்த பயணம், ‘அமிர்தக் காலம்’; புதிய இந்தியாவின் கனவு நனவாகுமா? -

கல்வி சார்ந்த பயணம், ‘அமிர்தக் காலம்’ எனப்படும் புதிய இந்தியாவின் அபிவிருத்தி நோக்கங்களுடன் இணைந்ததாக அமைந்தது - பிரதமர் அலுவலக துணைச் செயலாளர் சந்திரமோகன் தாக்கூர்

ஆரோவில் : கல்வி சார்ந்த நோக்கில் ஆரோவிலை பார்வையிட்ட பிரதமர் அலுவலக துணைச் செயலாளர்  சந்திரமோகன் தாக்கூர் கல்வி முறை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளர் சந்திரமோகன் தாக்கூர் அவர்கள், இன்று ஆரோவிலில் கல்வி சார்ந்த ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். மாற்று கல்வி முறைகள், சமூகப் பங்கேற்பு, மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஆரோவில்லின் முயற்சிகளை நேரடியாக அறிந்து கொள்வதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. மேலும், அவர் புதுச்சேரியில் உள்ள ஆறு "PM SHRI" பள்ளிகளையும் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமாக 12 "PM SHRI" பள்ளிகள் உள்ளன. அவற்றில் 6 பள்ளிகள் புதுச்சேரியிலும், மீதமுள்ள 6 பள்ளிகள் காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளிலும் அமைந்துள்ளன.

 அருண் (ஆரோவில் செயற்குழு), சந்திரமோகன் தாக்கூரை வரவேற்று, ஆரோவில்லின் கல்வி நோக்கங்கள், அதன் நிர்வாக அமைப்பு மற்றும் சமூக அடிப்படையிலான கற்றல் சூழல் குறித்து விரிவாக விளக்கினார். குறிப்பாக, SAIIER ஸ்ரீ அரவிந்தர் சர்வதேச கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆரோவில்லில் உள்ள தனித்துவமான கல்வி அமைப்பு பற்றி அவருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மாத்ரிமந்திர் பார்வையிடும் போது, ஆரோவில்லின் ஒருங்கிணைந்த தத்துவங்களை அவர் நேரடியாக அனுபவித்தார். ஆரோவில்லின் கல்வி முறை குறித்து அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

இந்தப் பயணத்தின் போது, ஆரோவில் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பல்வேறு பிரிவுகள் மற்றும் கற்றல் மையங்கள் குறிப்பாக அனுபவக் கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, ஆராய்ச்சி மற்றும் கிராமியத் தொடர்புகள் போன்ற துறைகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

முக்கியமாக, ஆரோவில் அறக்கட்டளையின் செயல்பாடுகள் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிலையில், அதன் செயலர் டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஐஐடி மெட்ராஸுடன் சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒத்துழைப்பு, கல்வி, கிராம மேம்பாடு மற்றும் நிலையான தொழில்நுட்பங்களில் ஆய்வு மற்றும் வளர்ச்சி தொடர்பான புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

 தாக்கூர், ஆரோவில்லின் கல்வி முயற்சிகளைப் பாராட்டினார். புதுச்சேரியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் "PM SHRI" பள்ளிகளுடனான எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இந்தக் கல்வி சார்ந்த பயணம், ‘அமிர்தக் காலம்’ எனப்படும் புதிய இந்தியாவின் அபிவிருத்தி நோக்கங்களுடன் இணைந்ததாக அமைந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget