மேலும் அறிய

விடுதலையாகி 80 ஆண்டுகள் கடந்தும் பேரவலம்: சாதிய கொடுமைக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி கண்டனம்!

தீண்டாமைக் கொடுமையால் பட்டியலின ஊராட்சி பணியாளர் தற்கொலை முயற்சி: விடுதலையடைந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்வது  பேரவலம் - அன்புமணி இராமதாஸ்  கண்டனம்

சென்னை : மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கம்பூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர், பணியிடத்தில் இழைக்கப்பட்ட சாதியக் கொடுமைகள் மற்றும் தீண்டாமை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிப்பதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில்.,

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கம்பூர் ஊராட்சி மன்றத்தில்  தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பணியிடத்தில் தமக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவத்திற்காக மேலூர் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். பட்டியலினப் பணியாளருக்கு சாதியின் அடிப்படையில் இழைக்கப்பட்ட அநீதிகள் கண்டிக்கத்தக்கவை.

தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும்  சசிகலா உள்ளிட்ட சில பணியாளர்களுக்கு எதிராக தீண்டாமைக் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும்,  ஊராட்சி மன்றத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான  தேநீர்க் குவளைகளை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு, காகிதக் குவளைகளைப் பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அதுமட்டுமின்றி, கம்பூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் பெண்மணியின் காலணியை தூக்கி வரும்படி சசிகலா கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்  அவரது கணவர் டி.பிரகாஷ்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

கம்பூர் ஊராட்சி மன்றத்தில் தமக்கு  இழைக்கப்படும் தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பே  ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும், காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அவர்களிடமும் சசிகலா புகார் செய்துள்ளார். ஆனால், மாவட்ட ஆட்சியரும் எந்த நடவடிக்கையும்  எடுக்காத நிலையில் தான் சசிகலா இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக அவரது கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியா விடுதலை அடைந்து 80 ஆண்டுகள் ஆகின்றன. பட்டியலின மக்களின் சமூக, பொருளாதார  முன்னேற்றத்திற்காக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அவர்களின் முன்னேற்றத்திற்காகவும்,  சமூக நல்லிணக்கத்திற்காகவும் அரசு பதவிகளில் இருப்பவர்கள் துணை நிறக வேண்டும். ஆனால், அவர்களே தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகளை முன்னெடுப்பவர்களாக இருப்பதை அனுமதிக்க முடியாது.

தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வரையிலும் புகார் அளிக்கப்பட்ட பிறகும் கூட, அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை ஏற்க முடியாது. தீண்டாமையை அரசே ஊக்குவிக்கிறதோ  என்ற ஐயத்தைத் தான் இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன.  இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி,  உண்மை நிலையை  வெளிக்கொண்டு வருவதுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
கல்லில் புதைந்த வரலாறு... ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு பிரதியெடுக்கும் பயிற்சி!
கல்லில் புதைந்த வரலாறு... ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு பிரதியெடுக்கும் பயிற்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget