Tomato And Onion Price: கொட்டிக்கிடக்கும் தக்காளி, வெங்காயம்.! போட்டி போட்டு அள்ளும் மக்கள்- ஒரு கிலோ இவ்வளவு தானா.!!
Tomato And Onion Price: சமையலில் பிரிக்க முடியாத ஒன்று காய்கறிகள். எனவே தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது.

சமையலில் ருசியை கொடுக்கும் காய்கறிகள்
சமையலில் முக்கிய தேவையாக இருப்பது காய்கறிகள். எனவே பல மாவட்டங்களில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு காய்கறிகள் லாரி,லாரியாக வருகிறது. எனவே காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படும். எனவே பச்சை காய்கறிகளை மக்கள் அதிகளவு வாங்கினாலும் அதைவிட அதிகமாக தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சைவம் முதல் அசைவம் வரை தக்காளி,வெங்காயம் முக்கிய தேவையாக உள்ளது. ரசம் வைப்பதாக இருந்தாலும் சரி, பிரியாணி சமைப்பதாக இருந்தாலும் சரி இந்த இரண்டும் இல்லையென்றால் சுவையை கொடுக்காது.
ஏறி இறங்கும் தக்காளி, வெங்காயம் விலை
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 70 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல வெங்காயத்தின் விலையும் புதிய உச்சத்தை தொட்டது. இதனால் காய்கறிகள் வாங்குவதற்காக நடுத்தரமக்கள் போட்ட மாத பட்ஜெட்டை தாண்டிவிடும். அதேநேரம் வரத்து அதிகரித்து தக்காளி மற்றும் வெங்காயம் விலை குறைந்தால் இல்லத்தரசிகளுக்கு கொண்டாட்டம் தான். அப்படித்தான் தற்போது தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 15 முதல் 20 ரூபாய்க்கும், வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும் தரத்தை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாய்க்கு 5 முதல் 6 கிலோ தக்காளி வெங்காயத்தை வியாபாரிகள் கூவி கூவி விற்பனை செய்கிறார்கள்.
கொட்டிக்கிடக்கும் தக்காளி
இதன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பொதுமக்கள் பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்கிறார்கள். இதேபோல பச்சை காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது. கேரட் ஒரு கிலோ 30- 35 ரூபாய், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய், அவரைக்காய் ஒரு கிலோ 35-40 ரூபாய், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய், இஞ்சி 65 ரூபாய், வெண்டைக்காய் ஒரு கிலோ 30- 40 ரூபாய், முள்ளங்கி 20 ரூபாய், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45- 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
மேலும் பீட்ரூட் ஒரு கிலோ 30 -35 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 30- 40 ரூபாய், பீன்ஸ் 40 ரூபாய், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், குடை மிளகாய் 30 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய், சுரைக்காய் 25 ரூபாய், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.























