மேலும் அறிய

"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்

ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த மனைவியை மீண்டும் அழைத்துச் செல்ல வந்த கணவனை, வாக்குவாதம் முற்றியதால் அவரது மைத்துனரே நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

மது போதை - கணவன் , மனைவி இடையே சண்டை

சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் ( வயது 30 ). பெயிண்டராக வேலை செய்து வந்த இவர், திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதிபா என்ற பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் அருண் பாண்டியன் மதுபோதைக்கு அடிமையாகியுள்ளார். இவர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

"மனைவி கண் முன்னே அரிவாள் வெட்டு"

விரக்தியடைந்த பிரதிபா அருணை பிரிந்து வாழ முடிவு செய்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவரை பிரிந்து , திருமுடிவாக்கம் அருகே வழுதலம்பேட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் அருண் பலமுறை பிரதிபாவிடம் செல்போனில் பேசு முயற்சித்தும் , நேரடியாக சென்று சமாதானம் பேசியுள்ளார். ஆனால் பிரதிபா அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், மீண்டும் வழக்கம் போல தனது மனைவியை அழைத்துச் செல்வதற்காக அருண் பாண்டியன், பிரதிபாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரதிபாவின் தம்பி பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேசன், வேலு ஆகிய 3 பேரும் சேர்ந்து அருண் பாண்டியனை பிரதிபா கண்முன்னே சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

3 பேர் கைது

இதில் படுகாயமடைந்த அருண் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமுடிவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்ட அருண் பாண்டியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக பிரதிபாவின் தம்பி பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேசன், வேலு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
திருச்சி இனிப்புகளுக்கு வெளிநாடுகளில் செம மவுசு... ஏற்றுமதி 30% எகிறியது; களைகட்டும் தீபாவளி வியாபாரம்!
திருச்சி இனிப்புகளுக்கு வெளிநாடுகளில் செம மவுசு... ஏற்றுமதி 30% எகிறியது; களைகட்டும் தீபாவளி வியாபாரம்!
மதுரை ஓணான் கரடு மலையில் கல் குவாரிக்கு தடை: தொல்லியல் எச்சங்கள் பாதுகாக்க உத்தரவு!
மதுரை ஓணான் கரடு மலையில் கல் குவாரிக்கு தடை: தொல்லியல் எச்சங்கள் பாதுகாக்க உத்தரவு!
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget