சேலம் மாநகராட்சியில் மாமன்ற இயல்பு கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிலையில் 44வது வார்டு மாமன்ற உறுப்பினர் இமயவர்மன், கைகளில் இரும்பு சங்கிலியை கட்டிக்கொண்டு வந்து மாவட்ட கூட்டத்தில் பங்கேற்றார் முதலாவதாக அவர் பேச துவங்கினார். அப்போது, வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பூமி பூஜை போடப்பட்டது.


இதுவரை சாலை போடும் பணி மேற்கொள்ளப்படவில்லை மற்றும் தனது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி மலம் கழிப்பதை தடுப்பதற்கு தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கவுன்சிலர் குற்றச்சாட்டு வைத்தார். அப்பொழுது கைகளில் இரும்பு சங்கிலி கட்டிக்கொண்டு வந்து மனுவை மாநகராட்சி மேயரிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் தனது வார்டில் மழை பாதிப்பால் இடிந்து விழுந்த கட்டிடத்தை கட்டி கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். அதற்கு திமுக கவுன்சிலர் பதிலளித்த நிலையில் திமுக,அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.



திருமணிமுத்தாற்றை இன்னும் தூர்வாரவில்லை என்று திமுக பெண் கவுன்சிலர் குற்றம்சாட்டிய நிலையில், அதிகாரிகள் தூர்வாரி வருவதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை திருமணிமுத்தாறு இதுவரை தூர்வாரவில்லை என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். 


மேலும் சேலம் மாநகராட்சியில் முதலமைச்சரின் நமக்கு நாமே திட்டத்தில் போதுமான நிதி இல்லாததால் பணிகள் மேற்கொள்ளுவதில் காலதாமதம் ஆவதாக திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டை முன்வைத்தார். எனவே மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு நிதி கேட்டு வாங்கி கொடுத்து பணிகளை நடத்த உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.



இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி பேசத் துவங்கினார். அவர் பேசும்போது, சேலம் இரண்டடுக்கு பேருந்து நிலையம் மற்றும் நேரு கலையரங்கம் உள்ளிட்டவைகளில் முறையாக மின் இணைப்புகள் ஏற்படுத்தாததால் யாரும் வாடகைக்கு வராமல் மாநகராட்சிக்கு வருமானம் பாதிக்கிறது. மேலும் பேருந்து நிலையத்திற்கு வரும் மக்கள் பாதிப்படைகின்றனர்.


இதில் முறைகேடு நடப்பதாக அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் திமுக கவுன்சிலர்கள் ஒன்றுக்கு இரண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு திமுக கவுன்சிலர்கள் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடு நடத்தி சீரழித்துள்ளதாக கடுமையாக சாடினர்.


மேலும் மாநகராட்சி அதிகாரிகள் சாலையோரம் கடைகளின் குத்தகைதாரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டை அதிமுக கவுன்சிலர் முன்வைத்தார். 


அப்போது அதிமுக கவுன்சிலரை பேசவிடாமல், திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் என்று நிலையில் அனைத்து வார்டுகளையும் ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது என்று கூறிய நிலையில் திமுக கவுன்சிலர் வாக்குவாதத்தை வெளியிடப்பட்டனர்.


அப்பொழுது மாநகராட்சி துணை மேயர் அவரது சொந்த வார்டிற்குள்ளே செல்ல முடியாத நிலை இருப்பதாக பேசினார். அப்போது வடிவேல் பட காமெடி போன்று யார் பெரியவர்கள் என்று அடித்துக் காட்டுகள் என்று கூறுவது போன்று மாறி மாறி கடுமையாக சத்தம் எழுப்பினர். இறுதியாக அதிமுக கவுன்சிலர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்காத மாநகராட்சியை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். எப்படி இருந்தாலும் வெளிநடப்பு செய்வீர்கள் என தெரியும் என்று கூறி திமுக கவுன்சிலர்கள் சிரிப்பலைகளால் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை அதிர வைத்தனர்.