புதுச்சேரி : உங்க வீடுகளில் எலியை வளர்த்தாலும் சரி, யானையை வளர்த்தாலும் சரி கட்டாயம் புதுச்சேரி நகராட்சியிடம் உரிமம் பெறுவது முக்கியம். எனவே நாய் வளர்ப்பவர்கள் கட்டாயம் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சியை அணுகி உரிமம் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு 

Continues below advertisement

நாய்கள் வளர்ப்போர்கள் கவனத்திற்கு!

புதுச்சேரி நகராட்சி விதிமுறைகளை தெரிந்து கொண்டு, உரிமம் பெற்று வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்க்க வேண்டும். தெருநாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முக்கியமான உத்தரவைப் நேற்று பிறப்பித்திருக்கிறது. ஆக்ரோஷமாக இல்லாத நாய்களைக் கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட உத்தரவிட்டுள்ளது. தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்கத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், பிரத்தியேகமாக உணவளிக்கும் இடங்களை உடனடியாக உருவாக்க உள்ளூர் நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறது.

தெரு நாய்கள் மட்டுமின்றி, புதுச்சேரியில் வீடுகளிலும் நாய்கள் வளர்ப்பது அண்மை காலமாக அதிகரித்துள்ளது. அவர்களும் புதுச்சேரி நகராட்சி விதிமுறைகள் ஏதும் தெரியாமல் நாய்களை வளர்த்து வீதிகளில் சுற்றி திரிய விடுகின்றனர். இதனால், தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Continues below advertisement

இனி, இது போன்று உரிமம் பெறாமல் வளர்ப்பு நாய்களை வளர்ந்த பிறகு தெருநாய்களாக திரியவிட்டால் அவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்க புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே நாய்கள் வளர்ப்போர்கள் இந்த விஷயத்தில் இனி உஷாராக இருக்க வேண்டும்.

நாய் வளர்க்க உரிமம் முக்கியம்!

உங்க வீடுகளில் எலியை வளர்த்தாலும் சரி, யானையை வளர்த்தாலும் சரி கட்டாயம் புதுச்சேரி நகராட்சியிடம் உரிமம் பெறுவது முக்கியம். எனவே நாய் வளர்ப்பவர்கள் கட்டாயம் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சியை அணுகி உரிமம் பெற வேண்டும்.

இதற்காக புதன்கிழமை தோறும் புதுச்சேரி கால்நடை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கான சிறப்பு உரிமம் வழங்கும் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமிற்கு செல்லப்பிராணிகளுடன் சென்று உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். பெயர், முகவரி, உரிமையாளர் புகைப்படம், ஆதார், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளில் ஏதேனும் ஒன்றினை செல்லப்பிராணியின் புகைப்படம் கொடுத்து விண்ணப்பிக்கலாம். உரிம கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கப்படும்.

வெறிநாய்க்கடிக்கு தடுப்பூசி

அங்கேயே வெறிநாய்க்கடிக்கு தடுப்பூசியும் வளர்ப்பு நாய்க்கு போடப்படும். அதன் பிறகு ஓரிரு தினங்களில் உரிமம் கிடைத்து விடும். இந்த உரிமம் ஓராண்டிற்கு செல்லுபடியாகும். ஓராண்டிற்கு 100 ரூபாய் கொடுத்து நாய் வளர்ப்பதற்கான உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம். ஆனால் இது மாதிரி உரிமம் இல்லாமல் நாய்களை வளர்த்தால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கவும் புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தில் இடம் உள்ளது.

ரேபிஸ் நோய்

ரேபிஸ் தடுப்பூசி தெருநாய்கள் என்றாலும், வீட்டு நாய்கள் என்றாலும் பெரிய பிரச்னை அவை கடிப்பதால் வரும் ரேபிஸ் நோய். உஷாராக இல்லாவிட்டல் சில நேரங்களில் மரணம் கூட நேரலாம். ரேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் 100 சதவீதம் ரேபிஸ் நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால், இங்குள்ள அனைத்து நாய்க்கும் ரேபிஸ் நோய் இருக்கும் எனக் கூற முடியாது. நுாறில் ஒரு நாய்க்கு ரேபிஸ் நோய் தொற்று இருக்கக்கூடும். என்றாலும், எந்த நாய் கடித்தாலும், பின் விளைவுகளைத் தடுக்க ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதே பாதுகாப்பு.

தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

வளர்ப்பு நாய்களுக்கு கால்நடை மருத்துவமனையை புதன்கிழமைதோறும் அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ளுவது உங்களுக்கும் பாதுகாப்பு; மற்றவர்களுக்கும் பாதுகாப்பு. இதுமட்டுமின்றி செல்ல பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் வயதாகி விட்டலோ, நோய் ஏற்பட்டாலோ, உரிமையாளர்கள் வெளியூர் மாற்றலாகி செல்லும் போதோ தெருவில் விட்டு விடுகின்றனர். அப்படி விடப்படும் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

 

 

இது போன்ற சூழ்நிலையில் நகராட்சிகளை அணுகி, செல்ல பிராணிகளை ஒப்படைத்துவிட்டு, நிம்மதியாக செல்லலாம்.