தமிழ் நாட்டில் கொடநாடு சம்பம் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தப் போகிறது என்று கடந்த ஜூலை 17ம் தேதி தெரிவித்திருந்தேன். ஆனால், அதை விட பெரியதாகவும், அதற்கு முற்றிலும் மாறான மற்றோரு பிரச்சனை பூதாகரமாக வெடிக்க இருக்கிறது. நம் முன்னே பல மகிழ்ச்சியூட்டும் தருணங்கள் நிறைந்திருப்பதாக தெரிகிறது என அதிமுகவின் முன்னாள் ஐ.டி. பிரிவு நிர்வாகியான ’அஸ்பையர்’ சுவாமிநாதன் ட்வீட் செய்துள்ளார்.
மறைந்த ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்குச் சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய வளையார் மனோஜுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. தங்களை ஏவியது எடப்பாடி பழனிசாமிதான் எனக் குற்றம்சாட்டியவர் வளையார் மனோஜ் என்பது குறிப்பிடத்தக்கது. மனோஜ் தற்போது ஜாமீனில் வெளிவந்திருப்பதை அடுத்து கோடநாடு கொலை வழக்கில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது.
முன்னதாக, அதிமுகவின் முன்னாள் ஐ.டி. பிரிவு நிர்வாகியான ’அஸ்பையர்’ சுவாமிநாதன் கோடநாடு கொலை வழக்கு குறித்து தொடர்ச்சியாக பல தகவல்களைத் தனது ட்விட்டர் வலைதளத்தில் பகிர்ந்து வந்தார்.
Continues below advertisement
குற்றம் சாட்டப்படுபவர் யார் எனக் குறிப்பிடாமல் மொட்டை ட்வீட்களை அவர் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்த நிலையில் அந்த ட்வீட்களை அகற்றச் சொல்லி அவருக்கு மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது. அதுபற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவர் ‘என்னை ஏன் மிரட்டுகிறார்கள், என் ட்வீட்களை ஏன் அகற்றச் சொல்கிறார்கள்? நம்பகத்தன்மையுள்ள வட்டாரத்திலிருந்து வரும் தகவல்களை நான் பகிரக்கூடாதா?நான் ட்வீட்களை அகற்றப்போவதில்லை. என்னதான் ஆகிறது எனப் பார்ப்போம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
கோடநாடு விவாகாரத்தில் அஸ்பையர் சுவாமிநாதன் கூறியது போலவே நடைபெற்றது. இதன் காரணமாக, தற்போதைய அவரின் ட்விட்டரின் பதிவுகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.