சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை வளாகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
ஒப்பந்ததாரர் உரிமம் புதுப்பிப்பதற்காக நீர்வளத்துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 2,14,540/- உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடல் அரிப்பு தடுப்பு, நீர்வளத்துறையின் உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல மணி நேர சோதனைக்கு பின் உதவி செயற்பொறியாளர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.