தமிழகத்தில் வேலைவாய்ப்பு

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களோடு தொழில் துறை ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பல லட்சம் பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. மேலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் வேலைவாய்ப்பை உருவாக்காமல் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் வகையில் ஐடி மற்றும் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

இதனால் சொந்த ஊரிலேயே பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 5ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கிடும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவாரூரில் வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது. வருகிற 13.12.2025 சனிக்கிழமை, நேரம் : காலை 9.00 மணி முதல் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கல்லுப்பாலம், விளமல் - திருவாரூர் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள எந்த வித கட்டணமும் இல்லை. அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சிறப்பு அம்சங்கள்

100 க்கும் மேற்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

5000 க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள்

அயல்நாட்டில் வேலைவாய்ப்புப் பெறப் பதிவு வழிகாட்டுதல்

TNSDC/DDU-GKY - 2 மேம்பாட்ட பயிற்சிக்கான பதிவுகள்

ஒன்றிய /மாநில அரசுகளின் பணி வாய்ப்புப் பெற வழிகாட்டுதல்கள்

கல்வித்தகுதிகள்

8th 10th 12th, ITI, DIPLOMA ANY DEGREE, NURSHING, PHARMACY, BE

மேலும் விவரங்களுக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருவாரூர்.

தொடர்புக்கு : 04366-224226

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தாங்கள் கலந்துகொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.