Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
ஆணவக் கொலைகள் மீது பாஜக கடுமையான கோபத்தில் உள்ளோம். தவறு செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.
க.சே.ரமணி பிரபா தேவி Last Updated: 26 Aug 2025 01:16 PM
Background
பாஜக அலுவலகத்திற்கு காதல் திருமணம் செய்யும் யார் வேண்டுமானாலும் நம்பி வரலாம், நாங்கள் அதை வரவேற்கிறோம் என்று அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். மதுரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது...More
பாஜக அலுவலகத்திற்கு காதல் திருமணம் செய்யும் யார் வேண்டுமானாலும் நம்பி வரலாம், நாங்கள் அதை வரவேற்கிறோம் என்று அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். மதுரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:ஆணவக் கொலைகள் மீது பாஜக கடுமையான கோபத்தில் உள்ளோம். தவறு செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். பாஜக அலுவலகத்திலும் எத்தனையோ பேர் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தே நிறையப் பேர் நம்பி வந்திருக்கிறார்கள்.பெருமையாக சொல்லிக்கொள்ளத் தேவையில்லைநியாயம் கிடைக்கும் என்று நம்பி வருகிறார்கள். நாம் சில இடத்தில் தாய், தந்தையை அழைத்துச் சொல்கிறோம், சில இடங்களில் காவல் ஆய்வாளர்களிடம் சொல்லி, நியாயமாகச் செயல்படச் சொல்லி இருக்கிறோம். எனவே இதை நாங்கள் மட்டும்தான் செய்கிறோம் என பெருமையாக சொல்லிக்கொள்ளத் தேவையில்லை.ஒரு கட்சி அலுவலகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அனைத்து ஜாதி, மதத்திற்கும் பொதுவானது. பாஜக அலுவலகத்திற்கு யார் வேண்டுமானாலும் நம்பி வரலாம், நாங்கள் அதை வரவேற்கிறோம்.தயவுசெய்து வாருங்கள்தயவுசெய்து வாருங்கள். நாங்கள் நியாயமாக நடந்து கொள்வோம்; நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் கட்சி அலுவலகத்திற்கு வருவதை விட இது சமுதாயத்தில் உள்ள புற்றுநோய்ப் பிரச்சினை. கடந்த 200, 300 ஆண்டுகளாக இந்தப் பிரச்சினை உள்ளது.இந்து சமுதாயத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை சாதிப் பிரச்சினை. இதற்கு பள்ளிகள், பாடத்திட்டங்களில் மாற்றம் வேண்டும். கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து அரசு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். 18 வயதுக்குக் கீழ் உள்ளவர் ஜாதியை வைத்து கொலை செய்தால்கூட, அவரை மைனராக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எனது கருத்து.ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம்நான் 16 வயதிலேயே சாதிக்காகக் கொலை செய்து விட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்வேன் என்றால் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஆணவப் படுகொலைக்கு எதிராக அரசு சட்டம் இயற்ற வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சண்முகம், கட்சி அலுவலகங்களில் காதல் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அழைப்பு விடுத்திருந்தார். இதையொட்டி அண்ணாமலையிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.