தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளார். மது இல்லாத தமிழ்நாடு தொடர்பான வெள்ளை அறிக்கையை சமர்பிக்க நேரம் ஒதுக்கி தருமாறு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். 


இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “ மது இல்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல, தமிழக பொது மக்களின் விருப்பமும் கூட. அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வகுத்துள்ளது. இது குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.


இது தொடர்பாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மாநில துணை தலைவர் திரு. கரு.நாகராஜன் அவர்கள் தலைமையிலான ஐவர் குழுவானது தங்களை சந்தித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தினை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.


ஆகவே தாங்கள், வருகின்ற ஜூலை 11ந் தேதி முதல் 13ந் தேதி அல்லது இம்மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில், தங்களது பொன்னான நேரத்தை இந்த சந்திப்பிற்கு ஒதுக்கி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


தங்களது மேலான பதிலினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என குறிப்பிட்டு இருந்தார். 


முன்னதாக, சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில்  தமிழக பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.


ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி மதுபான கடையிலிருந்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறார்கள். அந்த வருமானத்தை வைத்து தான் மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து வருவதாகவும் கூறுகிறார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மதுக்கடைகளை ஒழியுங்கள் அதற்கு மாற்று வழியாக கிடைக்கும் வருமானத்தை பாஜக தரப்பில் இருந்து வெள்ளையருக்கியாக தருகிறோம் எனக் கூறியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.


 நாங்கள் உருவாக்கி இருக்கும் மாற்று வழி வெள்ளை அறிக்கையை  தமிழக முதலமைச்சருடன் தருவதற்கு தேதி கேட்டு இருப்பதாகவும் அந்த தேதியை ஒதுக்கும் பொழுது நாங்கள் தர இருக்கிறோம் என தமிழக பாஜக துணை கரு நாகராஜன் தெரிவித்தார்.


 தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை எட்டாம் தேதி   முதல்வருக்கு கடிதம் அனுப்பியதாகவும் , தமிழக அரசு முதல் கட்டமாக 500 மதுக்கடைகளை கூறி இருப்பதாக கூறுகிறார் ஆனால் பள்ளிக்கூடங்கள்,கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் மதுக்கடைகளை இதுவரை மூடப்படவில்லை என குற்றச்சாட்டு வைத்தார். 


 ஒரு புறம் மதுக்கடைகளை குறைப்பதாக சொல்கிறார்கள்  ஒரு புறம் மதுக்கடை வருவாய்  அதிகரிக்க வழி செய்கிறார்கள் திமுகவின் இரட்டை வேடம் இது தெரிவதாகவும்  அவர் விமர்சனம் செய்துள்ளார்  


 தமிழ்நாட்டின் மதுவிலக்கு முதலில் கொண்டு வந்தால் நாம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருக்கும் எனவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தகுதி இல்லை என  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கூறி இருப்பது வேடிக்கைத்தனமாக இருக்கிறது எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அமர்ந்து  விவாதிக்க தகுதியற்ற ஒரு மனிதரெல்லாம் பேசுவதை கண்டுகொள்ள நேரமில்லை என கூறினார். 


  2.50 லட்சம் ரேஷன் கார்டு உள்ளது இதில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுத்தாலே  ஒரு கோடி ரேஷன்  பெண்கள் பயன்பெறுவார்கள் எனவும், பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்குவதிலும்  குளறுபடிகள் நிறைந்த ஆட்சியாளர்கள்  எவ்வாறு பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என தமிழக பாஜக துணை தலைவர் கேள்வி எழுப்பினார்.