மேலும் அறிய

கே.என். நேரு மீது ₹2,300 கோடி ஊழல் குற்றச்சாட்டு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ஸ்டாலின் பதில் என்ன? - அண்ணாமலை கேள்வி

அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்.

பணிநியமனத்தில் ₹888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் அமைச்சர் கே.என். நேரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

திமுக அமைச்சர் கே.என்.நேருவின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ₹888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம். கடந்த அக்டோபர் மாதம், தமிழக அரசு தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோருக்கு, இந்த ₹888 கோடி ஊழலில், அமைச்சர்  கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, கடிதம் மூலம் அமலாக்கத்துறை வலியுறுத்தியிருந்தது. அதே போல, கடந்த டிசம்பர் மாதம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் சுமார் ₹1,020 கோடி ரூபாய் லஞ்ச ஊழல் நடந்திருக்கிறது எனக் கூறி, அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யக் கோரியிருந்தது. இது தவிர, இந்த ஆண்டு ஜனவரி மாதம், இதே துறையில், பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் பெற்ற வகையில் ₹365.87 கோடி லஞ்ச ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி, மூன்றாவது முறையும், அமலாக்கத்துறை ஆதாரங்களை அனுப்பியிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மூன்று கடிதங்களையும் இத்தனை மாதங்களாக திமுக அரசு கிடப்பில் போட்டிருந்தது. தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தற்போது என்ன பதில் கூறப் போகிறார்? திமுக ஆட்சியில், ஒரு ஆண்டில், ஒரு துறையில் மட்டுமே, சுமார் ₹2,300 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால், தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது? இந்த ஊழல்கள் எல்லாம் முதலமைச்சருக்கு தெரியாமல் நடந்தது என்று கூறப் போகிறாரா? உடனடியாக, அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் அனுப்பிய ₹1,020 கோடி பணி ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடைபெற்ற லஞ்ச ஊழல் வழக்கிலும், ₹365.87 கோடி பணியிட மாற்ற லஞ்ச வழக்கிலும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், இந்த அனைத்து ஊழல்களும், முதலமைச்சருக்கு தெரிந்தே நடந்திருக்கிறது என்ற முடிவுக்கே, மக்கள் வருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்துறையில் ஒப்பந்தங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு ரூ.₹1,020 கோடி லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் கே.என்.நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
‘முக்குலத்தோர் வாக்குகளுக்கு ஸ்கெட்ச்’ மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைப்பு விழா நடத்தும் ஒபிஎஸ்..!
’முக்குலத்தோர் வாக்குகளுக்கு ஸ்கெட்ச்’ மு.க.ஸ்டாலினின் மெகா பிளான்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!

Embed widget