மேலும் அறிய

அரசு மருத்துவமனையை வீடாக மாற்றிய திமுக நிர்வாகி - அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள திமுக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்

கோவையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள திமுக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி 36-வது வார்டு பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை, வடவள்ளி பகுதி திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் என்ற நபர், தனது வீடாக மாற்றி, குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்ற செய்தி, திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சத்தைக் காட்டுகிறது. 

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிர் காக்கும் அரணாகத் திகழ்கின்றன. மகப்பேறு முதல் அவசர சிகிச்சை வரை மக்கள் இவற்றைத்தான் நம்பியிருக்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத் துணிச்சல் ஒரு சாதாரண திமுக நிர்வாகிக்கு வருமானால், அவரது பின்னணியில், திமுகவின் முக்கியத் தலைவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்பதே பொருள். 

தமிழகம் முழுவதும், அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அரசு மருத்துமனைகள் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, அதனைக் கண்டுகொள்ளாமல், துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்த நாளையே ஐந்து ஆண்டுகளாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்? 

கடந்த 2011 ஆம் ஆண்டு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு என்று ஒரு புதிய துறையையே தொடங்கும் அளவுக்கு, மறைந்த திமுக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலமான  2006 - 2011  காலகட்டத்தில், திமுகவினர் நில அபகரிப்பில் ஈடுபட்டதை தமிழக மக்கள் அறிவார்கள். அவரது மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், இன்னும் ஒரு படி மேல் சென்று, அரசுக்குச் சொந்தமான கட்டிடத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத் திமுகவினர் இறங்கியுள்ளனர். 

உடனடியாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள திமுக நிர்வாகி ஷ்யாம் சுந்தர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்தக் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Embed widget