மேலும் அறிய

பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை

15 வயது சிறுமியுடன் தனிமையில் இருந்த 21 வயது இளைஞரை, சிறுமியின் பெற்றோர் அடித்துக் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய கொடூர சம்பவம்

சிறுமியை காதலித்த இளைஞர்

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மாவட்டம் யெர்ரகோண்டபாலம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் 21 வயதுடைய ஆஞ்சநேயலு. இவரது தாய் தந்தை இருவரும் சிறுவயதிலேயே உயிரிழந்த நிலையில் அக்கா மாமாவிடம் வளர்ந்து வந்திருக்கிறார்.

எனவே ஆஞ்சநேயலுக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முடிவு செய்த அவரது அக்கா கடந்த (மே - 13) ஆம் தேதி அவரை பெண் பார்க்க அழைத்துச் சென்று மீண்டும் வீடு திரும்பிய போது பாதியிலே ஆஞ்சநேயலு முக்கிய வேலை இருப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் வீட்டுக்கு திரும்பாமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த ஆஞ்சநேயலுவின் அக்கா மற்றும் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த யெர்ரகோண்டபாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடைசியாக ஆஞ்சநேயலுவின் போன் பொட்டிரெட்டிபல்லி பகுதியில் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்ட போது வெங்கட்ராமன், ரமணா தம்பதியின் 15 வயது மகளும் ஆஞ்சநேயலுவும் காதலித்து வந்தது தெரிய வந்தது.

இளைஞரும் - சிறுமியும் தனிமையில் இருந்ததை பார்த்த பெற்றோர்

போலீசார் வெங்கட்ராமன் மற்றும் ரமணாவை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த ( மே 13 ) ஆம் தேதி பெண் பார்த்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஆஞ்சநேயலுவிற்கு போன் செய்த சிறுமி பெற்றோர் வீட்டில் இல்லை என கூறி, அவரை வீட்டிற்கு அழைத்ததாக சொல்லப்படுகிறது.

எனவே ஆஞ்சநேயலு அன்றிரவு 10.30 மணியளவில் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் தனிமையில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் அப்போது எதிர்பாராத விதமாக வீட்டிற்கு திரும்பிய சிறுமியின் பெற்றோரான வெங்கட்ராமன் மற்றும் ரமணா பார்க்க கூடாததை பார்த்து அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்.

துண்டு துண்டாக வெட்டி கொலை

மகளை அந்த கோலத்தில் பார்த்ததால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை வெங்கட்ராமன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஆஞ்சநேயலுவை சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

எனவே கொலையை மறைக்க நினைத்த வெங்கட்ராமன் ஆஞ்சநேயலுவின் உடலை பன்றி வெட்டும் கத்தியால் துண்டு துண்டாக வெட்டி அருகில் உள்ள 100 அடி ஆழ்துளை கிணற்றில் வீசியது தெரிய வந்தது. எனவே வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி மகளை கைது செய்த போலீசார் ஆஞ்சநேயலுவின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Superstar Rajinikanth : ’ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்த தடை’ ஏன் இந்த அதிரடி..?
Superstar Rajinikanth : ’ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்த தடை’ ஏன் இந்த அதிரடி..?
ஆவின் பச்சை பால் ரத்தா.. யாரை ஏமாற்றுகிறது தவெக அரசு? அண்ணாமலை சரமாரிக் கேள்வி
ஆவின் பச்சை பால் ரத்தா.. யாரை ஏமாற்றுகிறது தவெக அரசு? அண்ணாமலை சரமாரிக் கேள்வி
Rajinikanth: பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினிகாந்த் அறிக்கை; என்ன சொல்லி இருக்கார் தெரியுமா.?
பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினிகாந்த் அறிக்கை; என்ன சொல்லி இருக்கார் தெரியுமா.?
MK Stalin: “கான்ஃபிடண்ட்டா இருங்க”; முதல்வர் விஜய்க்கு திடீரென நன்றி, வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் - எதற்காக தெரியுமா?
“கான்ஃபிடண்ட்டா இருங்க”; முதல்வர் விஜய்க்கு திடீரென நன்றி, வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் - எதற்காக தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth: பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினிகாந்த் அறிக்கை; என்ன சொல்லி இருக்கார் தெரியுமா.?
பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினிகாந்த் அறிக்கை; என்ன சொல்லி இருக்கார் தெரியுமா.?
Time to Lead : ’அதிமுகவை கைப்பற்றும் டிடிவி தினகரன்’ பொதுச்செயலாளர் ஆகிறாரா..?
’அதிமுகவை கைப்பற்றும் TTV தினகரன்’ பொதுச்செயலாளர் ?
Duraimurugan : ’அவமதிக்கப்பட்டாரா துரைமுருகன்’? மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு செல்லாமல் திரும்பினார்…!
’அவமதிக்கப்பட்டாரா துரைமுருகன்’? மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு செல்லாமல் திரும்பினார்…!
Superstar Rajinikanth : ’ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்த தடை’ ஏன் இந்த அதிரடி..?
Superstar Rajinikanth : ’ரஜினியின் பெயர் புகைப்படத்தை பயன்படுத்த தடை’ ஏன் இந்த அதிரடி..?
DMK Alliance : ‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து துரோகம்’ கூட்டணியில் இருந்து வெளியேறும் வைகோ..?
‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து துரோகம்’ வெளியேறும் வைகோ..?
TVK ADMK : ”விஜய் அண்ணா சனிக்கிழமைன்னா வந்து ஆள் புடிச்சிட்டு போயிட்றாங்க” ஆர்.பி. உதயகுமார் வேதனை
”விஜய் அண்ணா சனிக்கிழமைன்னா வந்து ஆள் புடிச்சிட்டு போயிட்றாங்க” ஆர்.பி. உதயகுமார் வேதனை
DMK TVK:
"48 வயசு குழந்தையை தூக்கி சுமக்கும் ஸ்டாலின்" பெண் MLA-விற்காக களமிறங்கிய தவெக பாய்ஸ்
தவெகவுக்கு தாவிய விஜயதரணி; காங். டூ பாஜக டூ TVK- காய் நகர்த்திய காரணம்!
தவெகவுக்கு தாவிய விஜயதரணி; காங். டூ பாஜக டூ TVK- காய் நகர்த்திய காரணம்!
Embed widget