மேலும் அறிய

தேர்தலுக்கு முன் அதிரடி: 12 நாள்களில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு டெண்டர்கள்.. கிடைத்த வரை சுருட்டும் திமுக - கடுப்பாகும் அன்புமணி

12 நாள்களில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு 4385 டெண்டர்கள்: தோல்வி பயத்தில் கிடைத்த வரை சுருட்டும் திமுக - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கொள்ளையடிக்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளிகளை வாரி இறைப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

12 நாள்களில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு 4385 டெண்டர்கள்

12 நாள்களில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு 4385 டெண்டர்கள்: தோல்வி பயத்தில் கிடைத்த வரை சுருட்டும் திமுக! தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தின் முதல் 12 நாள்களில் மட்டும் தமிழக அரசுத் துறைகளின் சார்பில் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள பணிகளை மேற்கொள்வதற்கான 4,385 ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கொள்ளையடிக்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளிகளை வாரி இறைப்பது கண்டிக்கத்தக்கது. ஊரக வளர்ச்சி சார்பில் 229 ஒப்பந்தப்புள்ளிகள், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் சென்னை மாந்கராட்சி மற்றும் பேரூராட்சிகள் உள்பட 526 ஒப்பந்தப்புள்ளிகள், மின்சார வாரியம் சார்பில் 84 ஒப்பந்தப்புள்ளிகள் என நேற்று ஒரே நாளில் மட்டும் 839 ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றால், திமுக அரசு ஒப்பந்தங்களை வழங்குவதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். கடந்த 12 நாள்களில் வழங்கப்பட்டுள்ள 4385 ஒப்பந்தப்புள்ளிகளில் 77%, அதாவது 3788 ஒப்பந்தப்புள்ளிகள் இந்த 3 துறைகளின் வாயிலாக மட்டுமே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மின்னல் வேகத்தில் திமுக அரசு

நெடுஞ்சாலைத் துறை சார்பில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2100 கோடிக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் அவசர, அவசரமாக ஹைதராபாத் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதும், அதில் ரூ.700 கோடி வரை ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த ஒப்பந்தப்புள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதும் அனைவரும் அறிந்தது தான். அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.2000 கோடி நிதியை பயன்படுத்தி, அதற்கான ஒப்பந்தங்களை இப்போதே கோரியது என ஒப்பந்தங்களை வழங்குவதில் தான் திமுக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக அரசின் இந்த வேகத்துக்கு பின்னால் இருப்பது மக்கள் நலன் அல்ல. மாறாக கொள்ளையடிக்கும் குணம் தான்.

20% கமிஷன்

திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் குறைந்த பட்சம் 20% கமிஷன் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அப்படியானால், ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் மூலம் ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என கணக்கிட்டுக் கொள்ள முடியும். ஆட்சி முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமல்ல என்பது உறுதியாகி விட்டதால் கிடைத்தவரை கொள்ளையடித்துக் கொண்டு ஓடும் முயற்சியில் திமுக ஈடுபட்டிருக்கிறது. இதற்கெல்லாம் வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரேஷன் கார்டுக்கு ரூ. 5,000! புதுச்சேரி அரசின் மெகா அறிவிப்பு !
ரேஷன் கார்டுக்கு ரூ. 5,000! புதுச்சேரி அரசின் மெகா அறிவிப்பு !
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
EPS in Edappadi constituency : எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
"எங்களுக்கு மட்டும் நிதி இல்லையா?" திமுக அறக்கட்டளை நிதியையாவது கொடுங்கள் - கோரிக்கை விடுக்கும் ஆசிரியர்கள்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
EPS in Edappadi constituency : எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
Embed widget