மேலும் அறிய

பொதுத்துறை ஊழியர்களுக்கு 30% தீபாவளி போனஸ்: அன்புமணி வலியுறுத்தல்!

தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 30% தீப ஒளி மிகை ஊதியத்தை இனியும் தாமதிக்காமல் உடனே வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு

30% தீப ஒளி மிகை ஊதியத்தை இனியும்

தாமதிக்காமல் உடனே வழங்க வேண்டும்!

சென்னை: தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக 30% மிகை ஊதியத்தை இனியும் தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

தமிழ்நாட்டில் தீபஒளித் திருநாள் கொண்டாடப்படுவதற்கு இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தீபஒளி போனஸ் எனப்படும் மிகை ஊதியத்தை வழங்குவது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது.

 

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தீபஒளி திருநாள் குறிப்பிடத்தக்கது. 2026&ஆம் ஆண்டுக்கான தீபஒளி திருநாள் வரும் நவம்பர் 8&ஆம் நாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. தீப ஒளித் திருநாளையொட்டி அடித்தட்டு மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இதற்கு வசதியாக அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு முன்பணமும், போக்குவரத்துக் கழகங்கள், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு முன்பணத்துடன், மிகை ஊதியமும் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. தீபஒளித் திருநாளுக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன் இவை வழங்கப்பட்டால் தான் அதைக் கொண்டு தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தினருக்கு புத்தாடைகளை வாங்கி தீபஒளிக்கு தயாராக முடியும்.

 

ஆனால், 2026&ஆம் ஆண்டு தீப ஒளித் திருநாளுக்கு இன்னும் 23 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில். அது குறித்த அறிவிப்புகள் எதுவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை. வழக்கமாக தீப ஒளி திருநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொதுத்துறை நிறுவன நிர்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுகள் நடத்தப்படும். அப்போது தான் மிகை ஊதியத்தின் அளவை கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்மானித்து, ஒரு மாதத்திற்கு முன்பாக வழங்க முடியும். அண்மைக்காலங்களில் தொழிற்சங்கங்களுடன் எந்த பேச்சும் நடத்தாமல் தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆவின் ஆகியவற்றில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% மிகை ஊதியம், பிற பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் நிதிநிலையை பொருத்து 8.33% முதல் 10% வரை மிகை ஊதியத்தை அரசு தன்னிச்சையாக அறிவித்து வழங்கி வருகிறது.

 

தமிழ்நாட்டில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கடந்த 22 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20% மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கான மிகை ஊதியம் என்பது அவர்களின் மொத்த ஊதியத்தை கணக்கிட்டு வழங்கப்படுவதில்லை. மாறாக மிகை ஊதியக் கணக்கீட்டுக்கான ஊதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதன் ஆண்டு சராசரியிலிருந்து தான் 20% மிகை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி குறைந்தபட்சமாக ரூ.7000 முதல் அதிகபட்சமாக ரூ.16,800 மட்டுமே மிகை ஊதியமாக வழங்கப்படும் நிலையில், விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு மிகை ஊதியத்தின் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரி வருகின்றனர். ஆனால், அதை தமிழக அரசு ஏற்கவே இல்லை.

 

4 அல்லது 5 பேர் கொண்ட ஒரு தொழிலாளியின் குடும்பம் தீப ஒளித் திருநாளைக் கொண்டாட ரூ.7000 அல்லது ரூ.16,800 எந்த வகையிலும் போதுமானதாக இருக்காது. ஒரு குடும்பம் மிகவும் எளிமையாக தீப ஒளி திருநாளைக் கொண்டாட வேண்டும் என்றால் கூட, அதற்கு குறைந்தபட்சம் ரூ.25,000 தேவைப்படும். அதனால் தான் தீபஒளி திருநாளுக்கு 30%, அதாவது ரூ.25,210 மிகை ஊதியமாக வழங்க வேண்டும்; இதை பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும், தற்காலிகப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள் என அனைவருக்கும் முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

 

தீபஒளி திருநாளைக்கு மிகைஊதியம் வழங்குவதைத் தவிர்க்க முடியாது எனும் நிலையில், அதை முன்கூட்டியே அறிவித்து வழங்குவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? என்பது தான் தெரியவில்லை. இந்த விஷயத்தில் முந்தைய அரசுகள் கடைபிடித்த அதே அணுகுமுறையை இப்போதைய அரசும் கடைபிடிக்கக் கூடாது. தேவையில்லாமல் கால தாமதம் செய்து கடைசி நேரத்தில் மிகை ஊதியம் வழங்குவதால் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களின் குடும்பங்கள் தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலை ஏற்படுகிறது. தொடர்வண்டித்துறையில் பணியாற்றும் 11.40 லட்சம் பணியாளர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தமிழக அரசு தாமதிக்கக் கூடாது.

 

எனவே, தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 30% தீப ஒளி மிகை ஊதியம் வழங்கப்பட வேண்டும். இலாபம் ஈட்டும் நிறுவனங்கள், இழப்பை சந்திக்கும் நிறுவனங்கள், நிரந்தரப் பணியாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள், அவுட்சோர்சிங் ஊழியர்கள் என்ற எந்தவித வேறுபாடும் இல்லாமல் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஒரே அளவில் மிகை ஊதியத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தீபாவளி விருந்தாளி 'தீபாவளி' அணில்: காயமடைந்த குட்டிக்கு தம்பதியின் அன்பான சிகிச்சை!
தீபாவளி விருந்தாளி 'தீபாவளி' அணில்: காயமடைந்த குட்டிக்கு தம்பதியின் அன்பான சிகிச்சை!
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK Vijay: மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Embed widget