Anbu karangal scheme "அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டம்" என்பது தமிழக அரசால் வழங்கப்படும் ஒரு நலத்திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தைகள் அல்லது ஒரு பெற்றோர் மட்டுமே இருந்து அவரைப் பராமரிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் குழந்தைகள் 18 வயது வரை மாதாந்திர நிதி உதவி பெறலாம். இந்த கல்வி உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.2,000 வழங்கப்படுகிறது. 

Continues below advertisement

அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டம்

பெற்றோரை இழந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ: 2000/- வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை 15.9.2025 முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

 யாரெல்லாம் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : 

 ஆதரவற்ற குழந்தைகள்( பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் ),  கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டு சென்று இருப்பின்),  ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால் ), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் ( பெற்றோரில் ஒருவர் இருந்து மற்றொரு பெற்றோருக்கு உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்) இவர்கள் இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Continues below advertisement

இதற்காக பிரத்யேகமான விண்ணப்ப படிவம் எதுவுமில்லை. மாவட்ட ஆட்சியரிடம் கருணை மனு திங்கள்கிழமை அன்று கொடுத்தால் போதுமானது. அல்லது நேரிடையாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்தில் மனு மேற்கண்ட ஆவணங்களுடன் கொடுக்க வேண்டும். அல்லது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பமாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை அன்று நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளில் GDP. பாதிக்கப்பட்ட பெற்றோர் சார்பில் ஆட்சியரிடம் தேவையான ஆவணங்களை இணைத்து மனு ஸ்டாம்ப் 5 ரூபாய்க்கானது ஒட்டி, கருணை மனு அந்தந்த மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில் கொடுக்கலாம்.

குறிப்பு :

மனு ஆட்சியர் இடம் கொடுக்க பெற்றோர் மட்டும் கொண்டு போய் கொடுத்தால் போதுமானது. மாணவ, மாணவியரை உடன் அழைத்துச்செல்ல தேவையில்லை. பள்ளியில் இருந்து ஆசிரியர்களோ வேறு யாருமோ உடன் செல்ல தேவையில்லை. பெற்றோர் தம் உறவினர்களை அவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் உடன் அழைத்து செல்வது அவரவர் விருப்பம்.

இந்த மனு மீது கள விசாரணை செய்து முன்னுரிமைப்படி தொகையானது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

தேவைப்படும் ஆவணங்கள்:

பெற்றோர் ஆவணங்கள்: 

தந்தை (or) தாய் இறப்புச் சான்றிதழ்,  ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கண்டிப்பாக கிராமத்தில் வசிப்பவர்களுக்கு வருமானவரிச் சான்று குறிப்பாக 40000 முதல் 70000 க்குள் இருக்குமாறு பெறப்பட வேண்டும். நகரங்களில் வசிப்பவர்களுக்கு 72000 முதல் 96000க்குள் இருக்க வேண்டும்.(சான்று ஒரு வருடத்திற்குள் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.), ஜாதி சான்றிதழ், வாக்காளர் அட்டை பெற்றோர் குழந்தைகள் இருப்பவர்களுக்கு இணைக்க வேண்டும், வாரிசு சான்று, விதவை சான்று, இருப்பிட சான்று அல்லது பிறப்பிட சான்று

குழந்தைகள் ஆவணம் :

ஆதார் கார்டு, பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதற்கான சான்று, மாணவர் பிறப்பு சான்றிதழ்.

கவனத்தில் செலுத்த வேண்டியது: 

மனு அளித்தபின்னர் சில நாளில் வீட்டிற்க்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடமிருந்து மனு ஏற்பு கடிதம் வந்த பின்னர் தான் உதவித்தொகை பெற மாவட்ட முன்னுரிமை வரிசைக்கு வைத்திருப்பார்கள். எனவே, இந்த கடிதம் மனு கொடுத்த 30 தினங்களுக்குள் வரவில்லை என்றால் மீண்டும் குழந்தைகள் நல அலுவலகத்தை அணுகி மனு நிலைமை என்ன, ஏன் எனக்கு கடிதம் வரவில்லை என குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் சென்று மனு கொடுத்த பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். இதை செய்து கடிதம் வந்தால் தான் உதவித்தொகை கிடைப்பது உறுதி. இல்லையெனில் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பில்லை) கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.