ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை மாநிலத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு காங்கிரஸில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முன்னதாக, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரிக்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை மாநிலத் தலைவராக இருந்த கோபண்ணாவுக்கு பதிலாக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
யார் இந்த ஆனந்த் சீனிவாசன்..?
ஆனந்த் சீனிவாசன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) வணிகப் பள்ளியில் இணைப் பேராசிரியராகவும், நிதித் துறைத் தலைவராகவும் உள்ளார். இங்கு பணிபுரிவதற்கு முன்பு, டாக்டர். சீனிவாசன் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் நிதி உதவி பேராசிரியராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.