மேலும் அறிய

தனியார் பள்ளிகளின் மறைமுக கட்டணங்களுக்கு முற்றுப்புள்ளி.புதிய அரசு அறிவிப்பு!

ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்குள் அனைத்து தனியார் பள்ளிகளும் கடைபிடித்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் இயக்குனர் எஸ்.சுகன்யா தெரிவித்திருக்கிறார்.

ஜூன் மாதம் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் நேரம். பள்ளிகள் திறக்கும் நேரங்களில்  பெற்றோர்களுக்கு இருக்கும் ஒரே கவலை, "இந்த ஆண்டு எவ்வளவு ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டும்? என்பதுதான். அதிலும் இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் சில பெற்றோருக்கு நடுக்கமே வந்துவிடும். வீட்டு வாடகை, விலைவாசி உயர்வுக்கு மத்தியில் பள்ளிக் கட்டணமும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. ஒரு சில தனியார் பள்ளிகள் மறைமுகக் கட்டணம் என்ற பெயரில் பெற்றோருக்கு சுமையை அதிகரிக்கின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக தமிழக அரசு ஒரு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


தனியார் பள்ளிகளின் மறைமுக கட்டணங்களுக்கு முற்றுப்புள்ளி.புதிய அரசு அறிவிப்பு!

இனி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகள், பிரைமரி, நர்சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகள் அனைத்தும் தங்கள் கல்விக் கட்டண விபரங்களை ஜூன் 5-ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்னதாகவே பள்ளியின் அறிவிப்பு பலகைகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று directorate of private school அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் தமிழ்நாடு தகவல் ஆணையம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி பள்ளிகளின் கட்டணம் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டிய விபரம். இதை பெற்றோரின் கண் பார்வை படும்படி பலகைகளில் அச்சிட்டு வைக்க வேண்டும். இதனை ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்குள் அனைத்து தனியார் பள்ளிகளும் கடைபிடித்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் இயக்குனர் எஸ்.சுகன்யா தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி பள்ளிக் கட்டண விபரங்கள் அனைத்தும் அந்த பள்ளியின் அதிகாரப்பூர்வ websit-ல் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். புதிய சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டிருந்தால், அந்த விண்ணப்பங்களிலேயே ஒவ்வொரு வகுப்பிற்கும் எவ்வளவு பள்ளி கட்டணம் வரும்? என்று அச்சிட்டு கொடுக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்குக் கூடுதலாக பள்ளியின் நோட்டீஸ் போர்டிலும் அனைத்து விவரங்களையும் காண்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தனியார் பள்ளிகளின் மறைமுக கட்டணங்களுக்கு முற்றுப்புள்ளி.புதிய அரசு அறிவிப்பு!

வெறும் அறிவிப்போடு மட்டுமல்லாமல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிக் கட்டண விபரங்கள் குறித்த தகவல்களை அந்தந்த பள்ளிகள் சரியாக பின்பற்றியிருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கான முறையான அறிக்கையை 2026-ஆம் ஆண்டின் ஜூன் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளிகள் பள்ளி கட்டணம் போர்டை வைத்திருக்கிறதா? என்பதை அரசுக்கு ஆதாரமாக சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் அதற்கான ஒப்புதல் கடிதத்தையும் பெற்று அரசு அலுவலக ஆவணங்களில் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பள்ளிகள், அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுகிறதா? என்பதற்கான ஆதாரமாக அமையும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் இயக்குனர் சுகன்யா கூறியிருக்கிறார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
காவல்துறையில் 2,545 புதிய பணியிடங்கள்.! 354 கோடி நிதி ஒதுக்கீடு- அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
ஆந்திராவுக்கு சென்ற மசாகான் டாக் திட்டம்: தமிழகத்துக்கு பெரும் இழப்பு- அரசு என்ன செய்யணும்?
ஆந்திராவுக்கு சென்ற மசாகான் டாக் திட்டம்: தமிழகத்துக்கு பெரும் இழப்பு- அரசு என்ன செய்யணும்?
Director Bharathiraja: மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Special bus weekend holidays : விடுமுறைக்கு ஊருக்கு போக போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு - எங்கிருந்து எங்கே தெரியுமா.?
விடுமுறைக்கு ஊருக்கு போக போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு - எங்கிருந்து எங்கே தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Iran Attacks Gulf: போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
Special bus weekend holidays : விடுமுறைக்கு ஊருக்கு போக போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு - எங்கிருந்து எங்கே தெரியுமா.?
விடுமுறைக்கு ஊருக்கு போக போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு - எங்கிருந்து எங்கே தெரியுமா.?
Embed widget