Viral Video : காருக்கு வாட்டர் வாஷ்.. அடுத்த நொடியே பறிபோன உயிர்! மனதை உலுக்கும் காட்சிகள்

Ambur : காருக்கு வாட்டர் சர்வீஸ் செய்த நபர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Continues below advertisement

ஆம்பூர் அருகே கார் வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியை சேர்ந்தவர் சுதாகர், இவர் அங்குள்ள தனியார் கார் பழுது பார்க்கும் கடையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தனது கடையில் வழக்கம் போல காருக்கு  வாட்டர் சர்வீஸ் செய்துக்கொண்டிருந்தார்.  காருக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்த போதே  திடீரென மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில்  சேர்ப்பதற்காக முயன்றுள்ளனர். ஆனால் அவர் துரதிருஷ்டவசமாக ந்சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: Budget Memes: வைரலாகும் பட்ஜெட் மீம்ஸ்கள்: இது மத்திய பட்ஜெட் இல்லை, பீகார் பட்ஜெட்

உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Budget 2025 : குட் நியூஸ் மக்களே ! கோவை - சத்தியமங்கலம் இடையே ரூ.1912 கோடியில் 4 வழி பசுமை சாலை

மேலும் சுகாதர் கீழே விழுந்து உயிரிழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காருக்கு வாட்டர் சர்வீஸ் செய்த நபர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Continues below advertisement