குடி போதைக்கு அடிமை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த ராமர் என்பவரின் மகன் கருப்பு முத்து ( வயது 43 ) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

Continues below advertisement

இதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில் , மகன் உதயசபரி கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ரிக் வண்டி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த கருப்பு முத்து நாளடைவில் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார்.

கணவன் - மனைவி இடையே தகராறு

தினம் தோறும் குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கருப்பு முத்து, வீட்டில் இருந்த மகன் மற்றும் மனைவியை அடித்து தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக சங்கீதா கணவரை பிரிந்து தனது மகன் சபரியுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார். ஆனால் கருப்பு முத்து தொடர்ந்து தினமும் குடித்து விட்டு மகன் மற்றும் மனைவியை தொந்தரவு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

Continues below advertisement

இந்நிலையில் கருப்பு முத்துவுக்கும் கடந்த ஏப்ரல் - 20 ம் தேதி அவரது வீட்டின் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்து கிடந்த கருப்பு முத்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதற்கட்டமாக அவரது மனைவி மகனிடம் விசாரணை நடத்திய போது கருப்பு முத்து குடிபோதையில் கீழே விழுந்து உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் கருப்பு அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

தந்தையை அடித்து கொன்ற மகன்

போலீசாருக்கு கருப்பு முத்துவின் மனைவி சங்கேத மற்றும் மகன் உதய சபரி மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, மகன் உதய சபரி 'தனது தந்தை மது போதையில் தங்களை அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும் இதனால் அவரை தாய் கண் முன்னே கட்டையால் தாக்கி கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து சிறுவன் உதய சபரியை கைது செய்த போலீசார் சேலம் சிறார் சிறையில் அடைத்தனர்.