மேலும் அறிய

Edappadi Palanisamy: அதிமுக-விற்கு புதிய பொதுச்செயலாளரா? பறிபோகிறதா எடப்பாடி பழனிசாமி பதவி?

அதிமுக-வில் தற்போது உட்கட்சி மோதல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பல்வேறு அரசியல் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. ஆளுங்கட்சியாக தவெக-வும், எதிர்க்கட்சியாக திமுக-வும் அமர்ந்துள்ள நிலையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள அதிமுக-வில் பூகம்பமே வெடித்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக:

எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுக சென்ற பிறகு, இதுவரை சந்தித்த அனைத்து பொதுத்தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிருப்தியை அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சித்ததாக சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக-வின் 47 எம்எல்ஏ-க்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கின்றனர். சசிகலா, தினகரனை விரைவில் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பறிபோகிறதா பொதுச்செயலாளர் பதவி?

விரைவில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பெரும்பாலான எம்எல்ஏ-க்கள், மாவட்ட நிர்வாகிகள் இருப்பதால் அவரது பொதுச்செயலாளர் பதவி தப்புமா? சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கூறியிருப்பதால் புதிய பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவாரா? என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.

இன்று நிருபர்களிடம் பேட்டி அளித்த சிவி சண்முகம் அதிமுக-வில் பிளவு ஏதும் ஏற்படவில்லை, எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் பொதுச்செயலாளர் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தாலும், திமுக ஆதரவில் ஆட்சியமைக்க நினைத்த இவரெல்லாம் பொதுச்செயலாளரா? என்று கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?

இனி வரும் நாட்களில் அதிமுக-வில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதியாகும். பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி மாற்றப்பட்டால் கட்சியில் அவரது முக்கியத்துவம் மிகப்பெரிய அளவில் குறையும். தனக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் செயல்படுவதால் எடப்பாடி பழனிசாமி அதை எப்படி சமாளிக்கப்போகிறார்? என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது பொதுச்செயலாளர் பதவியை தக்கவைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கட்சியின் மற்ற நிர்வாகிகளுடன் இணக்கமாக செயல்படுவாரா? சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியில் சேர ஒப்புக்கொள்வாரா? சசிலகாவும், தினகரனும் கட்சியில் இணைவது என்றால் அவர்கள் தொடங்கிய கட்சியை கலைப்பார்களா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. தற்பாேது மிகவும் நெருக்கடியான காலகட்டம் அதிமுக-வில்  ஏற்பட்டிருப்பது அதிமுக தொண்டர்களுக்கு வேதனையை உண்டாக்கியுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் - யார் யாருக்கு எந்தெந்த துறை?இதோ முழு விபரம்
தமிழ்நாட்டில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் - யார் யாருக்கு எந்தெந்த துறை?இதோ முழு விபரம்
முதல்வர் போல் செயல்படுங்கள் , எதிர்க்கட்சி தலைவர் போல் பேசாதீர்கள் - விஜயை விமர்சித்த தமிழிசை
முதல்வர் போல் செயல்படுங்கள் , எதிர்க்கட்சி தலைவர் போல் பேசாதீர்கள் - விஜயை விமர்சித்த தமிழிசை
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
iPhone 17 Huge Discount: நீங்க நம்பவே மாட்டீங்க.! கிட்டத்தட்ட பாதி விலையில் கிடைக்கும் ஐபோன் 17; எங்க, எப்படி வாங்குறது.?
கிட்டத்தட்ட பாதி விலையில் கிடைக்கும் ஐபோன் 17; எங்க, எப்படி வாங்குறது.?
Bullet 650 vs BSA Goldstar 650: புல்லட் 650-ஆ.? இல்ல கோல்ட் ஸ்டார் 650-ஆ? வாங்குறதுக்கு முன்னாடி எது சக்திவாய்ந்ததுன்னு பாருங்க
புல்லட் 650-ஆ.? இல்ல கோல்ட் ஸ்டார் 650-ஆ? வாங்குறதுக்கு முன்னாடி எது சக்திவாய்ந்ததுன்னு பாருங்க
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
Embed widget