AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
AIADMK Legislative Party Leader: அதிமுக உடைந்ததாக தகவல் வெளியாகி இபிஎஸ் அதை மறுத்த நிலையில், 30 எம்எல்ஏ-க்களுடன் பேரவைக்கு சென்று எஸ்பி வேலுமணியை சட்டமன்ற குழு தலைவராக்க, சிவி சண்முகம் கடிதம் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதிமுகவின் உட்கட்சி மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்று காலை எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்க 17 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதம் வழங்கப்பட்ட நிலையில், மாலையில் எஸ்பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்க 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதங்களுடன், முன்னாள் அமைச்சர் சிவி சண்மும் தலைமைச் செயலகம் சென்றதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவி சண்முகம் தலைமையில் 30 எம்எல்ஏ-க்கள் - உடைந்தது அதிமுக
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்திற்கு வந்து, சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலை 17 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்துடன் பேரவையில் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்குமாறு கோரப்பட்டது. இதையடுத்து, 30 எம்எல்ஏ-க்களின் நிலை என்ன.? கட்சி உடைந்துவிட்டதா என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, அது வெறும் வதந்தி என்றும், அதில் உண்மையில்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது, சிவி சண்முகம் தலைமையில், எஸ்பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் எனக் கோரி, 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதங்களுடன், தலைமைச் செயலகம் சென்று, தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதில், அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி செயல்படுவார் என்றும், அதிமுக கொறடாவாக சி. விஜயபாஸ்கர் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிப்படையாக தெரிந்த அதிமுக உட்கட்சி பிரச்னை
முன்னதாக, இன்று காலையிலேயே அதிமுகவின் உட்கட்சி மோதல் வெளிப்படையாக தெரியவந்தது. அதை அதிமுக நிர்வாகிகள் யாரும் வெளிப்படையாக பேசவில்லை என்றாலும், இன்று காலை சட்டப்பேரவைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில சட்டப்பேரவை உறுப்பினர்களும், சி.வி.சண்முகம் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும் தனித்தனியாக வருகை புரிந்தனர். அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சி.வி.சண்முகம், சட்டப்பேரவைக்கு வருகை தந்தும், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கவில்லை.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுக முக்கிய பிரமுகருமான எஸ்.பி.வேலுமணி, தொண்டாமுத்தூர் எம்எல்ஏவாகப் பொறுப்பேற்க வந்தார். அப்போது, அவர் தவெக அமைச்சர்கள் அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு வணக்கம் வைத்தார். அவர்களும் புன்சிரிப்புடன் பதில் வணக்கம் செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜயை பார்த்து எஸ்.பி.வேலுமணி வணக்கம் வைத்தார். அவரும் புன்சிரிப்புடன் வணக்கத்தை ஏற்று, மீண்டும் வணக்கம் சொன்னார். எதிர்க்கட்சிகளின் பக்கமும் வணக்கம் வைத்து எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தார். இதனால், அதிமுகவில் பிரச்னை இருப்பதும், ஏற்கனவே தகவல் வெளியானபடி, சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்படுவதும் வெளிச்சத்திற்கு வந்தது.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















