அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான பிறகு எடப்பாடி கே பழனிச்சாமி டெல்லிக்கு திடீர் விசிட் செய்யவிருக்கிறார். அதற்கான காரணங்கள் இந்த தொகுப்பில் தரப்பட்டுள்ளது. 


டெல்லி பயணம் செய்யும் எடப்பாடி கே பழனிச்சாமி தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின்  பிரியா விடை நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டிருகிறார். அதோடு, டெல்லியில் பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க எடப்பாடி கே பழனிச்சாமி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பின்னர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே பழனிச்சாமி முதன்முறையாக  இன்று டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தித்து முக்கிய விஷயங்களைப் பற்றி பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதிலிருந்தே ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தொடர்ந்து நீக்கி வந்தார். குறிப்பாக ஓபிஎஸ் மகன் மற்றும் அதிமுக பாராளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத்தினை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார். மேலும், ரவீந்திரநாத்தின் பாராளுமன்ற உறுப்பினருக்கான அந்தஸ்தினை ரத்து செய்ய வேண்டும் என மக்களவைத் தலைவருக்கு கடிதமும் எழுதினார்.  கடிதத்தை மக்களவை தலைவர் ஏற்கும் பட்சத்தில், ரவீந்திரநாத் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தை இழந்து, கட்சி சாராத பாராளுமன்ற உறுப்பினர்  ஆகிவிடுவார். பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்  கட்சி சாராத பாராளுமன்ற உறுப்பினராகும் பட்சத்தில், முக்கிய விவாதங்களின்போது அவருக்கு பேசுவதற்கு போதுமான நேரமும் முக்கியத்துவமும், வழங்கப்பட  மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. 


அதிமுகவே தனது முழுக்கட்டுப்பாட்டில் வந்த பிறகு, எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார். எம்.பி ரவீந்திரநாத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தினை ரத்து செய்ய பிரதமரிடம் பேசுவார் என கூறப்படுகிறது. மேலும், தனது ஆதரவாளரான கோவை வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட ஐ.டி ரெய்டு பற்றியும் பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலிம், புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின்  பதவியேற்பு விழாவிலும் கலந்துகொள்வார், அதன் பின்னர் தமிழகம் திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.