நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக 315% சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிந்து சோதனை செய்து வருகின்றனர்.
நாமக்கலில் 24 இடங்களிலும், மதுரை, திருப்பூரில் தலா ஒரு இடம் என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பாஸ்கர் எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4. 27 கோடி சொத்து சேர்த்ததாக புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், “நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.P.P.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி திருமதி.உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார். மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315% அதிகமாகும்.
எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது 11.08.2022 ஆம் தேதி நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.1/AC/2022 பிரிவு 13(2) r/w 13(1) (e) of PC Act 1988, 109 r/w 13(2) r/w 13(1) (e) of PC Act 1988 and 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
மேலும் இவ்வழக்கு மேற்படி வழக்கின் விசாரணை தொடர்பாக திரு.K.P.P.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று 12.08.2022-ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்