Delimitation Bill Fails: தமிழ்நாட்டின் பொன்னான வாய்ப்பு போச்சு.. மு.க.ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்!
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், நாம் 9 நாடாளுமன்ற இடங்களை இழந்திருப்போம். 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பால் மேலும் இழப்போம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்வதில் தோல்வி ஏற்பட்ட நிலையில், அதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தோல்வி
மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு இந்தியாவின் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுவரையறை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதா மீது 2 நாட்கள் விவாதம் நடந்த நிலையில் நேற்று மாலை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் இந்த சட்டமசோதா வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இந்த சட்ட மசோதாவுக்கு திமுக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. தொடர்ந்து மசோதா வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.
இந்த நிலையில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார். அதில் “தமிழகம் தனது அரசியல் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கும், தனக்குரிய பங்கான மேலும் 20 நாடாளுமன்ற இடங்களைப் பெறுவதற்கும் ஆன வாய்ப்பை இழந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்ட பொன்னான வாய்ப்பை நாம் இழந்துவிட்டது மட்டுமல்ல. கூடுதலாக 50% இடங்கள் கிடைக்கவிருக்கின்றன. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கைப்பாவையாக இருந்து, இந்த வாய்ப்பின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல், அவர் அதை கண்மூடித்தனமாக எதிர்த்தார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், நாம் 9 நாடாளுமன்ற இடங்களை இழந்திருப்போம். இந்த மசோதாவிற்கு நீங்கள் காட்டிய அறிவற்ற எதிர்ப்பின் காரணமாக, இப்போது தொகுதி மறுவரையறை 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்படும். மேலும் நாம் இன்னும் அதிகமான நாடாளுமன்ற இடங்களை இழப்போம்.
Tamil Nadu has lost the opportunity to increase their political power and its rightful share of 20 more MP seats.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 18, 2026
We have not only lost the golden opportunity given by Honourable Prime Minister Thiru. @narendramodi Avl to
get 50% more seats ..,
but @mkstalin being a puppet and… pic.twitter.com/7nwhoNdLdo
மேலும், 1998ல், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களின் தலைமையில் கீழான அரசில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தார். அப்போது, உங்கள் சொந்த இந்தியக் கூட்டணிக் கட்சிகளே அந்த மசோதா நிறைவேறாமல் பார்த்துக் கொண்டன. இவ்வாறாக, மசோதாவை எதிர்ப்பதன் மூலம் அந்த உணர்வையே நீங்கள் சிதைத்துவிட்டீர்கள். மேலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலுமுள்ள பெண்களுக்கும் மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளீர்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் செய்த கேடு அல்லது பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு நீங்கள் அழித்த மிகப்பெரிய வாய்ப்பா? இவற்றில் எதை கொண்டாடுகிறீர்கள்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















