செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவிகள் சிலர் அரசு பேருந்தில் ‘பீர்’ குடித்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 


இந்நிலையில், அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவிகளின் இந்த செயலுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அந்த பள்ளிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இனி இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் அவர்களுக்கு விளக்கி, எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது எப்படி சாத்தியம் என மக்கள் கேள்வி:


ஓடும் பேருந்தில் மாணவிகள் மது குடித்தது எப்படி சாத்தியமானது என அனைவரும் கேள்வி எழுப்பி உள்ளனர். பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் இதை எப்படி கண்டிக்காமல் விட்டனர் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. ஆனால், ஓட்டுநரும் நடத்துனரும் பேருந்தில் இல்லாதபோது இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த சில நாட்களாகவே, பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவிகள்மீது இது போன்ற குற்ற சம்பவம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதனால், பொது மக்களும் ஆசிரியர்களும் கடும் வருத்தத்தில் உள்ளனர். மேலும், இது போன்ற சம்பவங்களை தடுக்க பள்ளி கல்வி துறையில் தீவிர கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. 




பிற முக்கியச் செய்திகள்:










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண