CV Shanmugam: சிவி சண்முகம் சொன்ன அந்த ஒரு வார்த்தை! இபிஎஸ்-ஐ நிம்மதி மூச்சு விட வைத்ததா?
சட்டமன்ற உறுப்பினராக தனது பணியை முழுமையாக செய்வேன் என்று சிவி சண்முகம் கூறியிருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அதிமுக-வில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட மோதல் தற்போது அடங்கி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மறுபடியும் ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர். அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கமே சேர்ந்த நிலையில், சிவி சண்முகம் மற்றும் சிவி விஜயபாஸ்கரின் நிலைப்பாடு என்னவென்று தெரியாத நிலை நீடித்து வருகிறது.
முழுமையாக பணியாற்றுவேன்:
சிவி சண்முகத்தை தங்கள் பக்கம் இழுக்க தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இன்று மயிலம் தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். அவர் நன்றி தெரிவித்தபோது சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த மக்களுக்கு முழுமையாக கடமையாற்றுவேன் என்று பேசினார். எந்த வேண்டுகோள், கோரிக்கை என்றாலும் தன்னை அணுகலாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதன்மூலம், அவர் தனது எம்எல்ஏ பதவியிலே தொடர உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. அதிமுக-வில் தவிர்க்க முடியாத தலைவரான சிவி சண்முகம், சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மிக கடுமையாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார். குறிப்பாக, திமுக தயவில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயற்சித்தார் என்ற விமர்சனம் அதிமுக மட்டுமின்றி திமுக-வையும் மிக கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கியது.
நிம்மதி மூச்சுவிட்ட எடப்பாடி பழனிசாமி:
இந்த சூழலில், எடப்பாடி பக்கம் அனைவரும் சென்ற நிலையில், சிவி சண்முகம் வராதது அதிமுக தொண்டர்களுக்கு சற்று வேதனையாக இருந்தது. விழுப்புரத்தில் செல்வாக்கு மிகுந்த நபராக செயல்பட்டு வரும் சிவி சண்முகம் அதிமுக-விலே இருக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே செயல்பட வேண்டும் என்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடரும் சமரச முயற்சி:
இந்த சூழலில், அவர் சட்டமன்ற உறுப்பினராக தனது கடமையை முழுமையாக ஆற்றுவேன் என்று அவர் கூறியிருப்பது அதிமுக தொண்டர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதனால், சிவி சண்முகம் விரைவில் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என்று கருதப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் தங்கமணி, வேலுமணி மூலமாக அவரை சமாதானப்படுத்தும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்பி வேலுமணியுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சபாநாயகரிடம் கடிதம் அளித்த விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் தனியாக புதுக்கோட்டையில் ஆலோசனை நடத்தினார். அவரது முடிவு என்னவென்று தெரியாமலும் அதிமுக தலைமை குழம்பி உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் முக்கிய பலமாக அவர் கருதப்படும் நிலையில், அவரது முடிவு என்னவென்றும் இபிஎஸ் தரப்பு எதிர்பார்த்து காத்துள்ளது. இவர்கள் இருவரும் அதிமுக-வில் நீடிப்பது அதிமுக-விற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்





















