ADMK Breaking LIVE: ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை; எல்லாத்துக்கும் இபிஎஸ்தான் காரணம்” - சரவெடி வெடித்த கோவை செல்வராஜ்

AIADMK: அதிமுக கட்சியில் தொடரும் சர்ச்சைகள் குறித்த உடனடி தகவல்கள் இங்கே...

Continues below advertisement

LIVE

Background

AIADMK LIVE Updates: 

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. 

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்,முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார்,திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

தனி நீதிபதியை அணுகிய ஓபிஎஸ்

அதில் அதிமுக பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் 15 நாள்களுக்கு முன்பே வழங்கப்பட வேண்டும் என்றும், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடப்பதாக நேற்று மாலை தான் தனக்கு அழைப்பிதழ் வந்ததாகவும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோர தனி நீதிபதியை அணுகுமாறு ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தனி நீதிபதி முன் ஓபிஎஸ் முறையிட்டார்.

மேலும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழுக்கூட்டத்துக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட அழைப்பிதழை ஓபிஎஸ் வீட்டில் இருந்தவர்கள் வாங்கினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுக்குழுவில் பங்கேற்க ஓ. பன்னீர்செல்வத்துக்கு பொருளாளர் என்ற முறையில் பங்கேற்பாரா என அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

முன்னதாக அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒத்தி வைக்குமாறு ஓபிஎஸ் வைத்த கோரிக்கையை ஏற்று ஜூலை 7ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோர தனி நீதிபதியை அணுகுமாறும் ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஈபிஎஸ் தரப்பு வாதம்

முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில் மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என ஈபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்தது.

இதனையடுத்து, பழைய உத்தரவு பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட பழைய உத்தரவுகள் அனைத்தும் 23ஆம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மீண்டும் பொதுச் செயலாளர் பதவி

வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுவில் அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

பொதுக்குழு அன்று அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படவுள்ளதாக முன்னதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்

ஒற்றைத் தலைமை போட்டி

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர மற்ற எந்தத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஆனால்,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்,முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார்,திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

Continues below advertisement
17:56 PM (IST)  •  06 Jul 2022

ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை; எல்லாத்துக்கும் இபிஎஸ்தான் காரணம்” - சரவெடி வெடித்த கோவை செல்வராஜ்

ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை; எல்லாத்துக்கும் இபிஎஸ்தான் காரணம்” - சரவெடி வெடித்த கோவை செல்வராஜ்

14:36 PM (IST)  •  06 Jul 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு மீதான விசாரணை - நாளைக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு நடைபெற தடை விதிக்க கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்க்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

14:34 PM (IST)  •  06 Jul 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். அளித்த மனு: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!

வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

14:34 PM (IST)  •  06 Jul 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். அளித்த மனு தாக்கல்- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஓ.பி.எஸ். மனு மீது 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் 2.15 மணிக்கு விசாரணைக்கு நடைபெற இருக்கிறது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வருகிறது.

இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், எஸ். ஆர். ராஜகோபால் ஆகியோர் ஆஜராக உள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராக உள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனிநீதிபதி பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது என  உச்ச நீதிமன்றம் இன்று  தெரிவித்திருந்தது.

12:59 PM (IST)  •  06 Jul 2022

பொதுக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி- ஈ.பி.எஸ். ஆதரவாளர் இன்பதுரை

வரும் 11- ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் ஈ.பி.எஸ். ஆதரவாளர் இன்பதுரை தெரிவித்தார்.

12:34 PM (IST)  •  06 Jul 2022

அதிமுக கட்சியில் ஓ.பி.எஸ்.-க்கு 2% கூட ஆதரவு இல்லை- ஈ.பி.எஸ். தரப்பினர் கருத்து!

அதிமுக கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 2 சதவீதம் கூட ஆதரவு இல்லை என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

12:30 PM (IST)  •  06 Jul 2022

ஜூலை, 11- ல் அதிமுக பொதுக்குழு நடைபெற தடையில்லை: ஈ.பி.எஸ். தரக்கு சாதகமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழு நடைபெற தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்நிலையில், ஜூலை, 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

12:24 PM (IST)  •  06 Jul 2022

ஜூன் - 23 ஆம் தேதி பொதுக்குழு-சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஆணை நிறுத்திவைப்பு!

23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12:18 PM (IST)  •  06 Jul 2022

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த ஈ.பி.எஸ். மீதான வழக்கிற்கு தடை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

12:18 PM (IST)  •  06 Jul 2022

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த ஈ.பி.எஸ். மீதான வழக்கிற்கு தடை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

12:14 PM (IST)  •  06 Jul 2022

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு- இரு தரப்பினரும் பதிலளிக்க உத்தரவு!

இந்த மேல் முறையீட்டு வழக்கில் இரு தரப்பினரும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

12:11 PM (IST)  •  06 Jul 2022

கட்சிக்குள் விதிமீறல்கள் நடக்குமாயின், அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியும்- ஓபிஎஸ் தரப்பு விளக்கம்!

அதிமுக கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக யாரேனும் நடந்தால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியும் என ஓபிஎஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

12:08 PM (IST)  •  06 Jul 2022

ஒருவர் மட்டுமே கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்; அதனால்தான் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம்.- ஓ.பி.எஸ். தரப்பு

தற்போது உள்ள விதிமுறைகள் படி ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.அதுதான் விதி முறை. ஆனால் அதனை மீறும் வகையில் அது இரண்டு பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு ஒருவர் மட்டுமே கட்சியை கைப்பற்ற நினைக்கிறார் என ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

12:05 PM (IST)  •  06 Jul 2022

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிம்ன்றம்!

ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

12:00 PM (IST)  •  06 Jul 2022

இதிலென்ன நீதிமன்ற அவமதிப்பு உள்ளது? உச்ச நீதிமன்றம் கேள்வி!

அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டத்தில் என்ன நீதிமன்ற அவமதிப்பு இருக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

11:56 AM (IST)  •  06 Jul 2022

ஜூலை 11- ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை இல்லை- உச்ச நீதிமன்றம்

வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

11:52 AM (IST)  •  06 Jul 2022

உள் கட்சி விவகாரங்களில் நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்- ஓ.பி.எஸ். தரப்பினருக்கு நீதிபதிகள் அறிவுரை!

உங்களுக்குள் நட்போ அல்லது பிணக்கோ அதனை நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

11:50 AM (IST)  •  06 Jul 2022

தற்போது மேல்முறையீடு ஏன்? - உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி

ஜூன் 23-ஆம் தேதியே பொதுக்குழு முடிந்துவிட்டது.  தற்போது ஏன் முறையீடு ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

11:50 AM (IST)  •  06 Jul 2022

தற்போது மேல்முறையீடு ஏன்? - உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி

ஜூன் 23-ஆம் தேதியே பொதுக்குழு முடிந்துவிட்டது.  தற்போது ஏன் முறையீடு ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

11:46 AM (IST)  •  06 Jul 2022

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தடை விதிக்க இ.பி.எஸ். தரப்பில் கோரிக்கை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து நடத்த கூடாது என உத்தரவிடுமாறு இபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

11:45 AM (IST)  •  06 Jul 2022

இந்த விஷயத்தில் விசாரிக்க என்ன இருகிறது- உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி!

23  தீர்மானங்களை தவிர வேறு எதையும் நிறைவேற்ற கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அன்றைய தினம் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்ட அன்றே முடிந்துவிட்டது.  இதில் மேற்கொண்டு விசாரிக்க என்ன இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி!

11:40 AM (IST)  •  06 Jul 2022

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை- உச்சநீதிமன்றம்!

எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிராக ஒபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலையிடவில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து

11:38 AM (IST)  •  06 Jul 2022

ஓ.பி.எஸ். தரப்பு சென்னை உயர்ந்தீமன்றத்தில் நடந்த வழக்கில் தலையிடவில்லை- உச்சநீதிமன்றம்

எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிராக ஒபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலையிடவில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து

11:36 AM (IST)  •  06 Jul 2022

அதிமுக பொதுக்குழு சர்ச்சை: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு விசாரணை தொடங்கியது!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.