பிராமணர்கள் மீது ஏன் இவ்வளவு வன்மம் கொட்டப்படுகிறது என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். தெலுங்கர்கள் குறித்த தனது கருத்து திரிக்கப்பட்டு பொய் பிரச்சாரம் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு இனத்தை பற்றி தான் பேசவில்லை என்றும் தெலுங்கு தனக்கு தாய் வீடு போன்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

Continues below advertisement

விளக்கம் கொடுத்த நடிகை கஸ்தூரி:

நடிகை கஸ்தூரியின் தெலுங்கர்கள் குறித்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இங்குள்ள தெலுங்கு பேசும் மக்கள், மன்னர்கள் காலத்தில் அவர்களஇன் அந்தப்புரத்து பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என கூறி பரபரப்பை கிளப்பினார் நடிகை கஸ்தூரி.

Continues below advertisement

இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்த அவர், "தெலுங்கு இனத்தை பற்றி நான் பேசவில்லை. என் புகுந்தவீடு தெலுங்கு. என் மகள்களுக்கு தமிழும் தெலுங்கும் இரு கண்கள். எத்தனையோ பொய்களை பார்த்து விட்டேன். இதற்கு பயப்பட மாட்டேன்.

பிராமணர்கள் குறித்து என்ன பேசினார்?

நான் பேசியதை திரித்து பொய் பிரசாரம் செய்கிறார்கள். தெலுங்கு மக்களை நான் தவறாக பேசியதாக 100% பொய் பிரசாரம் மேற்கொள்கின்றனர். தெலுங்கு மக்கள் என்று நான் கூறவில்லை. இனவாதம் பேசவில்லை. பொய்களுக்கு அச்சப்படுபவர் நான் இல்லை. '

வந்தேறி என பிராமண சமுதாயத்தை கூறுபவர்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன். பிராமணர்கள் மீது ஏன் இவ்வளவு வன்மம். தனிப்பட்ட தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் கடந்து போகிறேன்" என்றார்.

சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பிராமண சமூகத்திற்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாக கூறி, அதை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தலித் சமுதாய மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை தடுக்கும் சட்டத்தை போன்று பிராமண சமுதாய மக்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி பேசிய கருத்துதான், பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.

இதையும் படிக்க: I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?