Actor Vijay Makkal Iyakkam LIVE: சோஷியல் மீடியாவில் வரும் அனைத்தையும் நம்பாதீர்கள்: குணம் முக்கியம்: நெஞ்சை நெகிழ வைத்த விஜய் உரை..!
Actor Vijay Makkal Iyakkam LIVE Updates: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் விருது நிகழ்ச்சி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.
இடைவேளைக்குப் பின்னர் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மீண்டும் தொடங்கியுள்ளது.
விருது வழங்கும் விழாவில் சிறிது நேரம் இடைவேளை விடப்பட்டுள்ளது.
600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவியைத் தவிர மற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் ரூபாய் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயிடம் பேசிய மாணவி, உங்கள் படங்கள் ரிலீசாகும் போது வரும் பிரச்சனைகளை பார்க்கும்போது கவலையாக இருக்கும், அதன் பின்னர் படங்கள் வெற்றி பெறும்போது பாரதியார் கவிதை தான் நினைவுக்கு வரும், அது, ”நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” என்ற கவிதை தான்.
உங்களுக்குள் ஒரு குரல் கேட்கும், அதாவது உனக்குள் ஒருவன் இருக்கிறான், உனக்குள் ஒருத்தி இருக்கிறாள் அந்த குரலை கேளுங்கள் - நடிகர் விஜய்.
சமூகவலைதளங்களில் பெரும்பாலும் பொய் செய்திகள் தான் பரப்பப்படுகிறது. இதனை நம்ப வேண்டாம்.
நடிகர் விஜயை மாணவி ஒருவர் கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
தனது உரைக்கு மத்தியில், தனக்கு பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல் உணர்கிறேன் என விஜய் குறிப்பிட்டார்.
உயர்கல்விக்காக பெற்றோர் கவனப்பில் இருந்து முற்றிலும் விலகி ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என விஜய் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மொத்தம் ஆயிரத்து 404 மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
தான் வரைந்த ஓவியத்தை விஜய்க்கு பரிசளித்த மாணவி சுஜனா
தான் வரைந்த ஓவியத்தை விஜய்க்கு பரிசளித்த மாணவி சுஜனா
தேர்தலில் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடக்கூடாது என உங்கள் பெற்றோரிடம் நீங்கள் கூறுங்கள் - நடிகர் விஜய்
மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக நடிகர் விஜய் விருதுகளை 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு விருது வழங்கி வருகிறார்.
மாற்றுத்திறனாளி மாணவிக்கு விருது வழங்க மேடையில் இருந்து கீழ் இறங்கி மாணவிக்கு விருதினை வழங்கினார் நடிகர் விஜய்.
தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தவறான முடிவினை எடுக்க கூடாது - விஜய்
600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற நந்தினிக்கு சான்றிதழுடன் வைர நெக்லஸை வழங்கினார் நடிகர் விஜய்.
நம் விரலை வைத்து நமது கண்ணை குத்தும் செயல் தான் தேர்தல், நாளைய வாக்காளர்களான நீங்கள் சரியான தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும் - விஜய்
மாணவர்கள் அம்பேத்கரைப் படிக்க வேண்டும், பெரியாரைப் படிக்க வேண்டும், காமராஜரைப் படிக்க வேண்டும் என விஜய் பேசினார்.
படிப்புடன் சேர்ந்து ஒழுக்கமும், சிந்தனை திறனும் மாணவர்களுக்கு அவசியம் என விஜய் பேசிவருகிறார்.
உங்கள் குணத்தை நீங்கள் இழந்துவிட்டால் நீங்கள் அனைத்தும் இழந்து விடுவீர்கள் என விஜய் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிவருகிறார்.
அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் பேசிய, காடு இருந்தா எடுத்துக்குவானுங்க, ரூவா இருந்தா புடிங்கிக்குவானுங்க படிப்ப மட்டும் எடுத்துக்கவே முடியாது சிதம்பரம் என்ற வசனம் தன்னை மிகவும் பாதித்ததாக நடிகர் விஜய் பேசினார்.
விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசத் தொடங்கினார்.
மாற்றுத்திறனாளி மாணவர் வழங்கிய பரிசை உடனே பிரித்து பார்த்த விஜய்
மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் அமர்ந்த விஜய்
விழாவின் வரவேற்புரையை அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசி வருகிறார்.
விருது வழங்கும் விழா தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் வருகை
விருது வழங்கும் விழா நடைபெறவுள்ள மண்டபத்திற்கு நடிகர் விஜய் வந்துள்ளார்.
மக்கள் இயக்க முதல்வர் - சென்னை ஈ.சி.ஆர். பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு விருது வழங்க நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து நடிகர் விஜய் புறப்பட்டுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, முதல் மூன்று இடங்களைபிடித்த மாணவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் வரை பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாங்காய் ஊறுகாய், ஐஸ்கிரீம்,
இஞ்சி துவையல், ஆனியன் வெள்ளரி தயிர் பச்சடி
கதம்பருப்பு
உருளைகிழங்கு பொரியல்
பட்டாணி வறுவல், சௌ சௌ கூட்டு, காலிஃப்ளவர் பக்கோடா
வெஜ் புலாவ், காரக்குழம்பு, மாங்காய் முருங்கை சாம்பார், தக்காளி ரசம்,
அடை
ஆனியன் வடை, அப்பளம்
மோர்
1700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் நடிகர் விஜய்
"தளபதி விஜய் அண்ணாவை நேரில் பார்ப்பது பல நாள் கனவு" - மாணவர்கள் நெகிழ்ச்சி பேட்டி.
விஜய்க்கு பரிசளிக்க தான் வரைந்த ஓவியத்தை கொண்டு வந்துள்ள மாணவி சுஜனா.
தொலைதூர மாவட்டங்களில் இருந்து வந்த மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் தங்குவதற்கு வசதியாக மதுராந்தகம் அருகே இரண்டு தனியார் திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் வந்துள்ளனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் சந்திக்க உள்ளார்
Background
தமிழ்நாட்டில் அண்மையில் வெளியான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று விருதுகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு விருது:
நடிகர் விஜயின் அரசியல் கவனம் எல்லாம் இளைஞர்களை குறிவைத்து இருக்கும் நிலையில், வருங்கால தலைமுறையினரையும் ஈர்க்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, அண்மையில் வெளியான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெற உள்ள இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.
ஏற்பாடுகள் தீவிரம்:
நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் செண்டரில் விருது வழங்கும் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தங்களது பெற்றோருடன் விழாவில் பங்கேற்க உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கட்-அவுட் எதுவும் வைக்கக் கூடாது என விஜய் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து, நீலாங்கரை முழுவதும் சுவர் ஓவியம் வரையும் பணியில் விஜய் ரசிகர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
விழா மேடை தயார்:
விழா நடைபெறும் மண்டபத்தில் அனைத்து வேலைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. விஜயின் இரண்டு படங்களுடன், திருவள்ளுவரின் படங்களும் இடம்பெற்றுள்ள ஒரு நீளமான பேனர் விழா மேடையில் இடம்பெற்றுள்ளது. அதில் “தமிழகம் முழுவதும் 2023ம் ஆண்டு நடைபெற்ற 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மாணவிகளை கௌரவிக்கும் தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான ஏற்பாடு:
மாணவர்களுக்கு செய்துள்ள ஏற்பாடுகள் தொடர்பாக பேசிய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் “மாணவர்கள் அனைவரும் பெற்றோருடன் வந்து மேல்மருவத்தூர், தாம்பரம் பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட 2 மண்டபங்களில் தங்கி தயாராகி விடுவார்கள். அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக நீலாங்கரையை அடைந்து விடுவார்கள். அனைவருக்கும் நொறுக்குத்தீணி, தண்ணீர் பாட்டில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி சரியாக 1 மணிக்குள் அனைவருக்கும் 12 வகை காய்கறிகளோடு சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
விழா நடைபெறும் இடம்
விஜய் மக்கள் இயக்கம்:
தமிழ் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாது என சொல்வார்கள். அந்த வகையில் முதலமைச்சர்களும் சரி, அரசியல் கட்சியின் தலைவர்களாகவும், தொண்டர்களாவும் பல நடிகர், நடிகைகள் உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து அரசியலின் அடுத்த வாரிசாக நடிகர் விஜய் வருவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. தனது அரசியல் பயணத்திற்கான விதையை தனது ரசிகர் மன்றத்தை ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஆக மாற்றியதன் மூலம்15 ஆண்டுகளுக்கு முன்பே விதைத்து விட்டார் என்று சொல்லலாம்.
வேகம் காட்டும் விஜய்:
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்கள் பலர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். விஜய்யின் அனுமதியுடன் தான் இது நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் கணிசமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அரசியல் பிரவேசத்திற்கான பணிகலை விஜய் முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி, இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே தற்போது 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மாணவிகளை விருது வழங்கி கவுரவிக்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -