Sarathkumar: யூடியூப் சேனல்கள் மீது நடிகர் சரத்குமார் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்.. பின்னணி என்ன?
யூடியூப் சேனல்கள் மீது நடிகர் சரத்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

யூடியூப் சேனல்கள் மீது நடிகர் சரத்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளம்பரம்:
நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்ததால் சமூக வலைதளத்தில் நடிகர் சரத்குமாருக்கு பல்வேறு கண்டன குரல்கள் கிளம்பியது. இது தொடர்பாக நடிகர் சரத்குமாரும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் நடிகர் விஜய்யின் தந்தையாக வாரிசு படத்தில் சரத்குமார் நடித்திருந்தார். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என வாரிசு பட பாடல் வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசியது பெரும் விவாத பொருளானது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சரத்குமார் குறித்து பல்வேறு எதிர்ப்பு பதிவுகளை பதிவு செய்து வந்தனர்.
யூ டியூப் சேனல் மீது புகார்:
இந்நிலையில் நடிகர் சரத்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவரது குடும்பத்தினரை இழிவு படுத்தும் வகையிலான வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
நடிகை ராதிகாவின் உடல் நிலை குறித்தும், குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும், பொய்யான தகவல்களை பதிவு செய்து இழிவு படுத்து விட்டதாகவும் நடிகர் சரத்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் நடிகர் சரத்குமார் பற்றி அவதூறு பரப்பும் வகையிலும் வீடியோ வெளியிட்டுள்ளதாக இரண்டு யூடியூப் சேனல்கள் மீது புகார் அளித்துள்ளார். குறிப்பாக இது போன்று அவதூறு பரப்பும் சில யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்குமாறு புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.





















