நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் 75-வது அமிர்த பெருவிழாவினை கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் நாளை முதல் வரும் 15-வது தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு கேட்டுகொண்டார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் தேசியக் கொடி பறந்து கொண்டிருக்கும் ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கொரோனா தொற்று கால ஊரங்கிடன் போதும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வீடுகளில் இருந்தபடியே கை தட்டுவது, வீடுகளில் விளக்கேற்றுவது உள்ளிட்டவற்றை செய்தார். இப்போது பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க தனது வீட்டில் தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளார்.
பா.ஜ.வினரும் ரஜிகாந்த் அரசியலுக்கு வருவதற்காக காத்திருக்கின்றனர். ரஜினிகாந்தை ஆதரித்து வருகிறது.
அதிக வரி செலுத்திய ரஜினி:
தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்திய காரணத்திற்காக, நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை விருது வழங்கி கவுரவித்துள்ளது.
வருமான வரி விழா:
நாடு முழுவதும் ஜூலை 24ம் தேதி வருமான வரி விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்த நாளில் வருமான வரி செலுத்துவதன் முக்கியத்துவத்தையும், வருமான வரி செலுத்துவதற்கான ஊக்கத்தையும் தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது
வருமான வரி விழாவையொட்டி, அதை கொண்டாடும் வகையில், நேற்று சென்னையில் உள்ள இசை அகாடமியில் சென்னை மற்றும் புதுச்சேரிக்கான வருமான வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தலைமையில் விழா நடைபெற்றது, இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையும் பங்கேற்றார்.
அப்போது அதிக வரி செலுத்தியவர்களை கவுரவிக்கும் வகையில், பாராட்டுக்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்தியதற்கான விருது வழங்கப்பட்டது. விருதை ரஜினிகாந்த் சார்பாக அவரது மகள் சௌந்தர்யாவிடம், தமிழிசை வழங்கினார்.
அன்றே சொன்னார் ரஜினி:
இந்நிலையில் நடிகர் ரஜினி, பல ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய ஓரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் நடிகர்களில் அதிக வரி செலுத்தி கொண்டிருக்கிறேன் என்று அன்றே கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்