Jai: விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்ததால் 2 படங்கள் கேன்சல் ஆகிடுச்சு.. உண்மையை உடைச்ச நடிகர் ஜெய்
விஜய்யின் தவெக-விற்கு தேர்தல் களத்தில் ஆதரவு அளித்த காரணத்தால் தன்னுடைய 2 படங்கள் ரத்தாகிவிட்டதாக ஜெய் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெய். தீவிர விஜய் ரசிகரான இவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தீவிர ஆதரவாளராக உள்ளார்.
விஜய்க்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால் இவர் தனக்கு திரை வாய்ப்பு ஏராளமாக தவறிவிட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
அண்ணனின் தைரியம்தான்:
அண்ணனுக்கு இருக்கும் தைரியம்தான் தம்பிக்கும் உள்ளது. என்ன எதிர்காலம்? இது எங்கு நோக்கி போகும் என்று தெரியவில்லை. அனைவரும் ஒரு விஷயத்தை எதிர்பார்க்கிறோம். கடந்த ஆட்சி பற்றி நான் தவறாக ஏதும் சொல்லவில்லை. அவர்களுக்கும் ஒருபோட்டியாகத்தான் இருக்கும். அவர்கள் நல்லது செய்தால் நாம் இன்னும் நல்லது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கும் தோன்றும்.
இது ஆரோக்கியமான விஷயம். பொதுவாகவே எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். இரண்டு, 3 ஆண்டுகள் அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்து அவருக்கு ஆதரவு தெரிவித்தால் நான் என்ன கஷ்டங்களை எதிர்கொள்வேன் என்று தோன்றவில்லை. எதிர்காலத்தை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். அவர் வெற்றி பெறுவாரா? தோற்பாரா? அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
படங்கள் அடுத்தடுத்து ரத்து:
இது ஆபத்து. இதை செய்யாதே என்று அக்கறையாக பலரும் கூறினார்கள். என்னைப் பொறுத்தவரை சினிமா வேறு. மக்கள் பணி வேறு. மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற விஷயத்தில் என் வாழ்க்கை போனால் போகட்டும். தமிழ் படத்தில் நடிக்காவிட்டால் என்ன? மலையாளம், தெலுங்கில் நடிக்கப்போகிறேன். ரேஸ் தெரியும். தெலுங்கில் இசையமைக்கலாம். ஹோட்டல் வைத்துக் கொள்கிறேன்.
தவெக-விற்காக நான் எப்போது முதல் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினேனோ, அன்று முதல் பிரச்சினைகள். அண்ணனுக்கு 100 பிரச்சினைகள் என்றால் எனக்கு 10 பிரச்சினைகள். இரண்டு, 3 நாட்களிலே 2 படங்கள் கேன்சல் ஆகிடுச்சு. அவர்களுக்கும் பயம் ஆகிடுச்சு. நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அனுப்பிய படங்கள் ரத்தாகும் நிலையில் இருந்தது. தேர்தல் முடிவு அன்று அவர்களும் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பிவிட்டனர்.
நன்றிக் கடன்:
பகவதி படத்தில் எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்ததால்தான் அடுத்தடுத்து படங்கள் பண்ணேன். அதில் சில படங்கள் ஹிட் ஆகியது. சில படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. இது விஜய் அண்ணா செய்தது. அந்த நன்றிக்கடன்தான். எனக்கு பகவதி படத்தில் இருந்தே அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும். அவர் போலியான நபர் கிடையாது.
அவர் 100 பசங்களை படிக்க வைக்கிறார் என்றால் அவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். கட்சி தொடங்குவதற்கான அடித்தளமாக அவர் அதை நினைக்கவில்லை. நான் சொல்வது 20 வருடங்களுக்கு முன்பாக நடந்தது. வெளியில் தெரியாத அளவிற்கு நல்லது செய்தார். அவர் நல்லது செய்வதை நான் பார்க்கிறேன். ஒரு பொய்யைப் பேசத்தான் நிறைய பேச வேண்டும். அவர் உண்மையைப் பேசுகிறார். அதற்குத்தான் இவ்வளவு குறைவாக பேசுகிறார். பதவியேற்பு விழாவின்போது பேசினார். வாழ்த்து சொன்னேன். நன்றி என்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் ஜெய் தொடக்க காலம் முதலே விஜய்யின் மிகவும் ரசிகர் ஆவார். இவர் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்திருப்பார். அதன்பின்பே இவருக்கு அடுத்தடுத்த படங்கள் குவிந்தது. தவெக பரப்புரையின்போது இவர் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.
விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது அவர் அந்த பதவியேற்பு மேடையில் ஜெய்யும் ஒரு தவெக தொண்டராக இடம்பெற்றிருந்தார்.
18 வயதில் திருமணம்..கணவன் டார்ச்சரால் தவறிய குழந்தை..கெனிஷாவின் கடந்த காலத்தில் இவ்வளவு வலியா !
Before You Go
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
ட்ரெண்டிங் செய்திகள்






















