விழுப்புரம்: அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க, பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு, 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது.
பாமக பொதுக்குழு கூட்டம்
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான பட்டானூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த சிறப்பு பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த பொதுக்குழுவில் 300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், தலைவர் என 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த ஓராண்டுக்கு தலைவர் பதவியில் அன்புமணி நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மருத்துவர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் பொதுக் குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக பாமகவில் புதிய விதி 35 உருவாக்கம் செய்யப்பட்டு, அதன்மூலம் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கு தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் டாக்டர். ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் டாக்டர் ராமதாசிற்கு மட்டுமே வழங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்புமணிக்கு எதிராக 16 தீர்மானம்
ஒழுங்கு நடவடிக்கை குழு 8 பேரால் உருவாக்கப்பட்டுள்ளது.
- கடந்த 22.12.2024 சிறப்பு புத்தாண்டு பொதுக்கூட்டத்தில்
- மருத்துவர் அய்யா முன்னிலையில் மைக்கை தூக்கி போட்டது கட்சியின் தலைமை சென்னையில் செயல்படுவதாக அன்புமணி அறிவித்தது ஒழுங்கு நடவடிக்கையாக கருதுகிறது.
- பாமகவின் ஒரு அணியான சமூக ஊடகப்பேரவையையின் ஒரு சிலரை கையில் வைத்து கொண்டு மருத்துவர் ராமதாஸ் குறித்து மனவேதனை ஏற்படுத்தும் வகையில் சமுக வலைதளங்களில் பதிவேற்றம் வருவது
- தைலாபுரம் இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது.
- தனி பொதுக்குழு அறிவித்து அதில் நாற்காலி போட்டி அந்த நாற்காலிக்கு துண்டு போட்டதும் மருத்துவருக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என தெரிவித்தது.
- மருத்துவர் ராமதாசின் அனுமதி பெறாமல் உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டது.
- ராமதாஸ் இல்லத்திற்கு வருகை புரிந்தவர்களை கடத்தி சென்றது.
- மக்கள் தொலைக்காட்சியில் மருத்துவர் ராமதாசின் முகத்தை காட்டாத வகையில் செயல்படுவதால் திட்டமித்து அபகரித்து கொண்டுள்ளனர்.
- பசுமை தாயகம் அமைப்பு மருத்துவரால் துவங்கபட்டது திட்டமிட்டு பசுமை தாயகத்தை திட்டமிட்டு கைப்பற்றியது.
- நிறுவனர் தலைவர் ராமதாசின் அனுமதி பெறாமல் அன்புமணி பொதுக்குழு கூட்டம் நடத்தியது அந்த கூட்டத்தில் அய்யாவை அவமதிப்பது போல் இருக்கை போட்டது துண்டு அணிவித்தது மன்னிக்க முடியாத மிகுந்த வேதனை என பொதுமக்களே பேசும் அளவிற்கு உள்ளது.
- பாமக தலைமை அலுவலகம் தேனாம்பேட்டையில் நடைபெற்றதை தியாகராய நகருக்கு மாற்றியது ராமதாஸ் நியமிக்கபட்ட நியமனங்கள் அனைத்தும் செல்லும் நீட்டிக்கபடும் அன்புமணி நிர்வாகிகள் போடும் பொறுப்புகள் செல்லாது.
- 40 முறை அய்யா ராமதாசிடம் பேசியதாக கூறியது
- அருள், ஜி கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட்டு பிரார்த்தனை செய்வோம் என்று அன்புமணி தெரிவித்தது என 16 தீர்மானங்கள் ஒழுங்கு நடவடிக்கை குழு தீர்மானம் போட்டு மருத்துவர் ராமதாசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.