மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 8 மற்றும் 9 ஆம் தேதி 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


06.10.2023 மற்றும் 07.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலைப்பகுதிகள்,  நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


10.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


11.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


12.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


செங்கம் (திருவண்ணாமலை) 10, காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), RSCL வல்லம் (விழுப்புரம்) தலா 6, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 5, செங்கல்பட்டு, வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), திருமங்கலம் (மதுரை), பூண்டி (திருவள்ளூர்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) தலா 4, மணியாச்சி (தூத்துக்குடி), சோழவரம் (திருவள்ளூர்), திருவூர் AWS (திருவள்ளூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), செஞ்சி (விழுப்புரம்) தலா 3, பாலமோர் (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), சூலகிரி (கிருஷ்ணகிரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), மதுரை விமானநிலையம், மதுரை வடக்கு, மதுரை நகரம், நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), RSCL-2 கெடார் (விழுப்புரம்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), விழுப்புரம் தலா 2, மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு),  கத்திவாக்கம் (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), குளச்சல் (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), ஏழுமலை (மதுரை), விரகனூர் அணை (மதுரை), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), வாலாஜா (ராணிப்பேட்டை), திருப்புவனம் (சிவகங்கை), ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி), போளூர் (திருவண்ணாமலை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


தமிழக கடலோரப்பகுதிகள்:  


06.10.2023: குமரிக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.