திருவண்ணாமலை சென்று திரும்புகையில் ஏற்பட்ட விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். 

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15க்கும் மேற்பட்டவர்களுடன் டாடா ஏஸ் வாகனம் ஜானகிபுரம் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த, ஈச்சர் லாரி மீது மோதியது. முன்னால் சென்ற லாரி மீது டாடா ஏஸ் மோதிய நிலையில், பின்னால் வந்த கனகர வாகனம் டாடா ஏஸ் மீது பயங்கரமாக மோதியது.



 

அப்பளம் போல் நொறுங்கியது

 

இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கிய டாடா ஏஸ் வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது.  தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். இதில், பயணம் செய்த 6 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 5 பேரும்,  செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 



 

தீப திருவிழாவிற்கு





 

மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் , திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை தீப திருவிழாவிற்கு,  சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது, இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை நடந்த விபத்தால் அப்பகுதி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 



விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம்

 

 

அதிகாலையில் நடைபெற்ற இந்த  விபத்தில் உயிரிழந்த ஆறு பேரும், சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் சேர்ந்த  சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. சந்திரசேகர்( 70), தாமோதரன் (28), சசிகுமார் ( 35 ), சேகர் (55), ஏழுமலை (65), கோகுல் (33) ஆறு பேரும் உயிரிழந்தனர்.


 

படுகாயம் அடைந்தோர் விவரம்

 

 

ராமமூர்த்தி ( 35), சதீஷ்குமார் ( 27), ரவி ( 26), சேகர் ( 37) ,அய்யனார் ( 34), ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர் இதுதொடர்பாக வாகன ஓட்டுநர் பாலமுருகன் என்பவருடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது, என விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.