ABP Nadu Exclusive: அடிக்கடி ஆகும் பவர் கட்.. காரணம் இதுதான் - உண்மையை உடைத்த ராதாகிருஷ்ணன் IAS
தமிழ்நாட்டில் மின் தடை எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து மின்சாரத்துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் ABP நாடுக்கு பேட்டி.

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இல்லை. மின்சாரம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் மின்விநியோக பாதிப்பு ஏற்படுகின்றது என்று தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டி துணை மின் நிலையத்தில் தமிழ்நாடு மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் பரவலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடித்து வரும் நிலையில் துணை மின் நிலையத்தில் உள்ள கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் மின் விநியோகம் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, ராதாகிருஷ்ணன், அண்மையில் வெயிலின் தாக்கம் காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் சென்னையில் 5008 மெகாவாட் என்ற புதிய உச்சத்தில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது என்றார். மாநிலத்தில் இரவு நேரத்தில் 21000 மெகாவாட் மின்சாரம் தேவை என்ற அளவில் போதிய மின்சாரம் கை இருப்பில் உள்ளது என தெரிவித்தார். இரவு நேரங்களில் பயன்பாடு அதிகரித்து ஓவர் லோட் காரணமாக துணை மின் நிலையங்கள் மற்றும் மின் மாற்றிகளில் பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைபடுகிறது எனவும், பிரச்சனைக்குரிய இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதலாக பீடர்கள், டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன எனவும், தரம் உயர்த்தப்படும் துணை மின் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இரவு நேரங்களில் அனைத்து நிலை அதிகாரிகளும் கூடுதலாக ரோந்து பணிகளை மேற்கொண்டு மின்தடையை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். 11 நிறுவனங்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக சாலையை வெட்டும் பணிகளில் மேற்கொண்டு வருவதும் மின்தடைக்கான பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளதாகவும் அவர்களையும் மின்துறையுடன் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். மின்வெட்டை தீர்ப்பதற்காக கடைநிலை ஊழியர்கள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருவதாக கூறினார். சவால் நிறைந்த பணி என்பதால் அடிமட்ட ஊழியர்களுக்கு வீண் பதற்றத்தை உருவாக்காமல் இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கூடுதல் பணியாளர்களை நியமித்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். பல ஆண்டுகளாக உள்ள மின் ஒயர்கள் மின் கம்பங்கள் மாற்றாதது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் அளிக்கும் புகார்களை உடனுக்குடன் புகார் புத்தகத்தில் பதிவு செய்திட வேண்டும் என கடை நிலை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும், ஊடக செய்திகள் சமூக ஊடகங்கள் வாயிலாக வரும் புகார்கள் தொடர்பாகவும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். நிதி பற்றாக்குறையிலும் ஊழியர்களை கொண்டு மின்வெட்டு பிரச்சனையை தீர்த்து வருவதாக தெரிவித்த போது, நிதி பற்றாக்குறையின் போது 200 யூனிட் இலவசம் மின்சார திட்டம் தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு, கொள்கை அடிப்படையிலான விஷயங்கள் தொடர்பாக தற்போது பதில் அளிக்க முடியாது எனக் கூறிய ராதாகிருஷ்ணன் மின்வெட்டு பிரச்சனையை தீர்ப்பதற்கான பணிகளில் தற்போது கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
ஏபிபி நாடுக்கு பேட்டி
இதன்பின்னர் ஏபிபி நாடுக்கு அளித்த பேட்டியில், “இரவு நேரங்களில் பயன்பாடு அதிகரித்து ஓவர் லோட் காரணமாக துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகளில் பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைப்படுகிறது. பிரச்சனைக்குரிய இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதலாக பீடர்கள், டிரான்ஸ்பார்மர்கள் போர்க்கால அடிப்படையில் பொருத்தப்பட்டு வருகின்றன. தரம் உயர்த்தப்படும் துணை மின் நிலையங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் 21000 மெகாவாட் மின்சாரம் தேவை என்ற அளவில் போதிய மின்சாரம் கை இருப்பில் உள்ளது” என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
Before You Go
"விஜய் அங்கிள் ஒரு REQUEST" பள்ளி மழலைகள் கோரிக்கை நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
ட்ரெண்டிங் செய்திகள்






















