cold காஃபி, பலாப்பழ ஐஸ்கிரீம், பாஸந்தி, வெண்ணெய் முறுக்கு உள்பட 10 புதிய பொருட்களை ஆக. 20 ம் தேதி முதல் ஆவின் அறிமுகம் செய்கிறது.
ஆவின் நிறுவனம் கொண்டு வரும் புதிய பொருட்களின் விவரங்கள் பின்வருமாறு :
1. பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream)
2. வெள்ளை சாக்லேட் (White Chocolate )
3. குளிர்ந்த காஃபி (Cold Coffee)
4. வெண்ணெய் கட்டி (Butter Chiplets)
5. பாஸந்தி (Basundi)
6.ஆவின் ஹெல்த் மிக்ஸ் (Aavin Health Mix)
7. பாலாடைக்கட்டி (Processed Cheese )
8. அடுமனை யோகர்ட் (Baked Yoghurt)
9. ஆவின் பால் பிஸ்கட் (Aavin Milk Biscuit)
10.ஆவின் வெண்ணெய் முறுக்கு (Aavin Butter Murukku )
ஆவின் பொருட்கள் விலை உயர்வு :
மத்திய அரசின் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களான ஜிஎஸ்டி வரி 5% விதிப்பை தொடர்ந்து கடந்த ஜூலை 18ஆம் தேதி முதல் தனியார் நிறுவன பால் பொருட்கள் தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை 15 சதவிதம் அளவிற்கு உயர்த்தி் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனமும் இன்று முதல் தயிர், லஸ்ஸி, நெய் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தியுள்ளதாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தயிருக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் ஆவின் தயிர், மோர், நெய் போன்றவற்றின் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி கடந்த 27 ம் தேதி முதல் ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.
விலை பட்டியல் :
தயிர் விலை விவரம்:
ஸ்பெஷல் தயிர் 100 மில்லி ரூ.12
ஸ்பெஷல் தயிர் 200 மில்லி ரூ.28
பாக்கெட் தயிர் 500 மில்லி ரூ.35
சேஷட் தயிர் 200 மில்லி ரூ.18
ப்ரீமியம் கப் தயிர் 400 மில்லி ரூ.50
ப்ரீமியம் தயிர் 1 கிலோ ரூ.120
லசி விலைப் பட்டியல் அறிவோம்:
புரோபயாடிக் லசி 200 மில்லி ரூ.18
மேங்கோ லசி 200 மில்லி ரூ.25
சாக்கோ லசி 200 மில்லி ரூ.25
ஆவின் மோர் விலை என்னவென்று பார்ப்போம்:
இம்யூனிட்டி மோர் 200 மில்லி ரூ.18
பாட்டில் மோர் 200 மில்லி ரூ.12
பாக்கெட் மோர் 200 மில்லி ரூ.8
ஆவின் நெய் புதிய விலை இதுதான்:
நெய் 1 லிட்டர் ரூ.580
நெய் 500 மில்லி ரூ.290
நெய் 200 மில்லி ரூ.130
நெய் 100 மில்லி ரூ.70
நெய் 5 லிட்டர் ரூ.2900
நெய் (டின்) 15 கிலோ ரூ.9680
நெய் (கார்டன்) 1 லிட்டர் ரூ.575
நெய் (கார்டன்) 500 மில்லி ரூ.280
ப்ரீமியன் நெய் டின் 1 லிட்டர் ரூ.630
நெய் பவுச் 100 மில்லி ரூ.65
நெய் பவுச் 15 மில்லி ரூ.12
நெய் ஸ்பவுட் 500 மில்லி ரூ.285
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்