மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக பால் விளங்குகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்கு தேவையான பால் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பால் மட்டுமின்றி பாலை மூலப்பொருளாக வைத்து தயாரிக்கப்படும் மோர், தயிர் உள்பட பல்வேறு பால் பொருட்களையும் ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


ஐஸ்கிரீம் விலை உயர்வு:


மேலும், ஆவின் நிறுவுனம் சார்பில் பால் பொருட்களை கொண்டு பால்கோவா, ஐஸ்கிரீம் போன்ற இனிப்பு பொருட்களும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், ஆவின் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் ஐஸ்கிரீமின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.




இதன்படி, இனி ஆவின் சாகோபர் விலை 65 மில்லி 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அதிகரிக்கிறது. பால் – வெண்ணிலா 125 மில்லி ரூபாய் 28-ல் இருந்து ரூபாய் 30 ஆக விற்கப்பட உள்ளது. கிளாசிக் கோன் – வெண்ணிலா 100 மில்லி ரூபாய் 30ல் இருந்து ரூபாய் 35 ஆக அதிகரிக்கப்படுகிறது. கிளாசிக் கோன் 100 மில்லி ரூபாய் 30ல் இருந்து ரூபாய் 35 ஆக அதிகரிக்கிறது.


நாளை முதல் அமல்:


அதாவது, ஆவின் ஐஸ்கிரீம் ரூபாய் 2 முதல் ரூபாய் 5 வரை அதிகரிக்கிறது. ஆவின் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. கோடை காலம் தொடங்கியிருக்கும் சூழலில் ஐஸ்கிரீம்களின் விற்பனை படுஜோராக நடைபெறும். ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும் என்பதால் வெளியில் செல்லும் குழந்தைகள், இளைஞர்களின் பெரும்பாலான தேர்வாக ஐஸ்கிரீம் அமையும். ஐஸ்கிரீம் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோடை காலம் நெருங்கும் வேளையில் அரசு நிறுவனமான ஆவினே ஐஸ்கிரீம் பொருட்களின் விலையை உயர்த்தியதால், தனியார் நிறுவனங்களும் ஐஸ்கிரீம் விலையை உயர்த்துமா? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Nam Tamilar party symbol: கரும்பு - விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கக் கோர முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்


மேலும் படிக்க:ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிய தமிழகம்: தடையாணை பெறுவது எப்போது?- அன்புமணி கேள்வி