நாம் யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு தினந்தோறும் பல வகைகளில் மோசடி முயற்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, இணைய உலகத்தில் பணத்தை மோசடி செய்வதற்காக பல்வேறு கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.


ஆதார் பெயரில் நடக்கும் மோசடி: இம்மாதிரியான மோசடி கும்பல்களிலிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும் என அரசு விழிப்புணர்வு செய்து வருகிறது. இந்த நிலையில், சமீப காலமாக ஒரு செய்தி சமூக வலைதளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆதார் பெயரில் மோசடியில் ஈடுபட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதாவது, ஆதாருடன் செல்போன் எண் இணைக்கப்படவில்லை என்றால் அதன் கைரேகை இன்றுடன் காலாவதியாகிவிடும் என்றும் AADHAR KTC என்ற செயலியை பதிவிறக்கம் செய்து செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் ஆண்ட்ராய்டு செயலியுடன் ஒரு குறுஞ்செய்தி வாட்ஸ் அப்பில் உலா வருகிறது


ஆனால், இது ஒரு மோசடி முயற்சி என்பது தெரிய வந்துள்ளது. இதை, தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு சரிபார்த்து உண்மை என்னவென்று என்பதை விளக்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு அளித்துள்ள விளக்கத்தில், "ஆதார் தொடர்பாக இதுபோன்ற எந்த செயலியும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படுவது இல்லை.


 






UIDAI அளித்த விளக்கம்: 


செல்போன் எண்ணை ஆதார் பதிவு மையம் அல்லது தபால் சேவை மூலமாக மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும், ஆன்லைன் மூலமாகவோ அல்லது இதுபோன்ற செயலிகள் மூலமாகவோ பதிவு செய்ய முடியாது என்றும் இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI) விளக்கம் அளித்துள்ளது" என குறிப்பிட்டுள்ளது.


இம்மாதிரியான மோசடியில் சிக்கி பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். எனவே, இம்மாதிரியான மோசடியில் சிக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்.


இதையும் படிக்க: Fact Check: ஐடன் மார்க்ரமுக்கு முத்தம் கொடுத்தாரா காவ்யா மாறன்? புகைப்படம் உண்மையா?